Actor Sarathkumar: குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்..ஒன்றாக கூடிய சரத்குமார் குடும்பம் - வைரல் போட்டோஸ்!
நடிகர் சரத்குமாரின் குடும்பமே கலந்து கொண்ட கும்பாபிஷேக புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைராக பரவி வருகிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவை நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தான் முன் நின்று நடத்தி வைத்துள்ளார்.
கும்பாபிஷேக விழாவுக்கு தனது மனைவி ராதிகா மற்றும் மகள் வரலட்சுமி உடன் வருகை தந்த சரத்குமாருக்கு கோயில் நிர்வாகத்தினர் மாலை அணிவித்தும் பரிவட்டம் கட்டியும் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் சிறப்பு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில் எடுத்த புகைப்படங்களை சரத்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். பட்டுச் சேலையில் ராதிகாவும் வரலட்சுமி சரத்குமாரும் கோயிலில் மாலை மரியாதை என கம்பீரமாக நடந்து செல்லும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
"சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில் குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்கள் அனைவருடன் மேற்கொண்ட மனநிறைவான குலதெய்வ வழிபாட்டின் பலனாக, ஸ்ரீ காமாட்சி அம்மன் மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் அருளாசி மக்கள் அனைவருக்கும் கிடைக்க இந்த இனிய தருணத்தில் பிரார்த்திக்கிறேன்." என பதிவிட்டு இருக்கிறார் சரத்குமார்.
"இந்த தருணத்தில் எனது மகள் ரயானையும் அவளது குழந்தைகளையும் மிகவும் மிஸ் பண்ணுகிறேன். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களால் வர முடியவில்லை. அவர்களுக்காக பிரார்த்தனை செய்துகொண்டேன்." என ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் சரத்குமார் தனது குடும்பத்தினருடன் குலதெய்வ கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அனைத்து போடோக்களுக்கும் ரசிகர்கள் லைக் போட்டு கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்