Sarathkumar:'தொப்புள்ல இருந்து தண்ணி எடுத்தா.. காவேரி பிரச்சனையே வராது..' சரத்குமார் கிண்டல்
Sarathkumar: அந்தப் பாட்டுல வர மாதிரி தொப்புள்ல இருந்து தண்ணி எடுத்தா காவேரி பிரச்சனையே வராம தடுத்திருக்கலாம் என நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் கிண்டலாக பேசியுள்ளார்.

Sarathkumar: தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காலத்தில் சரத்குமார் தான் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருந்த மாஸ் ஹீரோ. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட். நாட்டாமை, சூரியவம்சம், சிம்மராசி போன்ற படங்கள் அந்த காலத்தில் பேசப்பட்டது. இன்று, அழரை மிடுக்கான போலீஸ் அதிகாரியாகவும், ஆஜானுபாகுவான வில்லனாகவும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்,
கிறங்க வைத்த சரத்குமார்
70 வயதாகும் சரத்குமார் தன் கட்டுக்கோப்பான உடலாலும், கம்பீரக் குரலாலும் இன்றும் சினி்மாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். இப்படி, மாஸ் கதாப்பாத்திரத்திலே. இவரைப் பார்த்து வந்தவர்களுக்கு ரொமான்ஸ் செய்து ஷாக் கொடுத்த படம் தான் ஏய். இந்தப் படத்தில் அவர் நடிகை நமீதாவுடன் சேர்ந்து அர்ஜூனா அர்ஜூனா பாடலுக்கு போட்ட ஸ்டெப்ஸ் எல்லாம் பார்ப்போரை கிறங்கவைக்கும்.
இன்றும் கூட யூடியூபில் அந்தப் பாடலை பார்க்கச் சென்றால் யாரவது 2025-லும் இந்தப் பாடலை பார்க்க வந்திருக்கிறீர்களா என கமெண்ட் செய்து கொண்டிருப்பர். சரத்குமார் அந்தப் பாட்டில் அத்தனை டீன் ஏஜர்களின் வாழ்க்கையில் அந்த ஒற்றை பாட்டின் மூலம் விளையாடி இருப்பார்.
இர்பான் கேட்ட கேள்வி
அப்படிப்பட்ட அந்த பாட்டை படமாக்கும் போது அவர் என்ன நினைத்திருப்பார். அவர் படம் வெளிவந்த பிறகு தன்னை நோக்கி வந்த கேள்விகளை எப்படி சமாளித்தார் என்பதை இர்பான் வியூஸ்-2 எனும் யூடியூப் சேனலில் கூறியிருக்கிறார்.
பிரபல யூடியூபர் இர்பான், சமீபத்தில் நடிகர் சரத்குமாருடன் சேர்ந்து ஒரு பேட்டி எடுத்திருப்பார். அந்த பேட்டியின் ரோஸ்ட் பகுதியில் சரத்குமாரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு வந்த பதில் தான் இவை எல்லாம்.
போட்டு பொளந்து எடுத்துட்டாங்க
அந்த பேட்டியில், சரத்குமார் நடித்த படத்தை அவரே கிண்டல் செய்ய வேண்டும் என இர்பான் கேட்கிறார். அப்போது பேசிய அவர், சிம்மராசி படத்தில் தின்னக்கு தின்னக்கு தா என்ற பாடல் இருக்கும். அந்த பாட்டில் நான் காலில் முட்டி வரை சலங்கை கட்டிக்கொண்டு, வலி தாங்க முடியாமல் டான்ஸ் ஆடி இருப்பேன். அந்தப் பாட்டை இப்போது கூட சோசியல் மீடியாவில் போட்டு பின்னி எடுக்கின்றனர். பல மீம்களில் அந்தப் பாட்டை போட்டு வைப் செய்கின்றனர் என்றார். மேலும் நான் கால் வலிக்க வலிக்க ஆடிய பாட்டை டப்பாங் குத்து பாட்டு போல போட்டு பொளந்து எடுத்து வருகின்றனர் என்றும் கூறினார்.
நான் வேணாம்ன்னு தான் சொன்னேன்
தொடர்ந்து பேசிய அவர். ஏய் படத்தில் அர்ஜூனா அர்ஜூனா பாடல் எடுக்கும் போது நான் எத்தனையோ முறை சுந்தரம் மாஸ்டரிடம் கூறினேன். இந்தப் பாட்டு எல்லாம் வேண்டாம் என்று, அவர் என் பேச்சை கேட்கவே இல்லை. அந்தப் பாட்டுல நான் நமீதா தொப்புள்ல இருந்து தண்ணி எடுத்து அப்படியே துப்ப வேண்டும். இதெல்லாம் நல்லா இருக்காதுன்னு சொன்னேன். அவர் என் பேச்சை கேட்கவே இல்லை.
காவிரி பிரச்சனையே இருக்காது
படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் என் பையன் அந்த பாட்டை பார்த்தான். அப்போது என்னிடம் வந்து டாடி என்ன டாடி இதெல்லாம். இதெல்லாம் உங்களுக்கே அசிங்கமா இல்லையான்னு கேட்டான். நான் அசிங்கமா தான் இருக்குன்னு சொன்னேன். ஆனா இந்த சுந்தரம் மாஸ்டர் என்ன விடலயேடான்னு அவன்கிட்ட பதில் சொன்னேன். இந்த மாதிரி எல்லாம் உண்மையிலேயே இருந்தா காவிரி நீர் பிரச்சனை எல்லாம் ஈஸியா வராம தீர்த்துருக்கலாம்ன்னு சொன்னேன் என அவரே சிரிப்பை அடக்க முடியாமல் கூறி இருந்தார்.
இவரது இந்த பேட்டிக்குப் பின் அர்ஜூனா அர்ஜூனா பாட்டு மீண்டும் யூடியூபில் ட்ரெண்ட் ஆகும் என்றால் அது சந்தேகமே இல்லை என்று கூறலாம்,

டாபிக்ஸ்