தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  26 Years Of Natpukkaga: நட்பின் பொக்கிஷம் மீசக்கார நண்பா.. 'நட்புக்காக' வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!

26 years of Natpukkaga: நட்பின் பொக்கிஷம் மீசக்கார நண்பா.. 'நட்புக்காக' வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!

Karthikeyan S HT Tamil
Jun 25, 2024 07:22 AM IST

26 years of Natpukkaga: எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இன்றைக்கும் நட்புக்கு இலக்கணமாக திகழும் படங்களின் வரிசையில் 'நட்புக்காக' படத்திற்கு தனி இடம் உண்டு. அந்தவகையில் காலத்தால் அழியாத காவியமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றைக்கும் இந்தப் படம் பேசப்பட்டு வருகிறது.

26 years of Natpukkaga: நட்பின் பொக்கிஷம் மீசக்கார நண்பா.. 'நட்புக்காக' வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!
26 years of Natpukkaga: நட்பின் பொக்கிஷம் மீசக்கார நண்பா.. 'நட்புக்காக' வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் சினிமாவின் மிக வெற்றிகரமான இயக்குநர்-நடிகர் கூட்டணிகளில் ஒன்று கே.எஸ்.ரவிக்குமார் - சரத்குமார் ஜோடி. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரத்குமார்.  இவர்கள் காம்போவில் வெளியான சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, நாட்டாமை பட வரிசையில் இணைந்த அடுத்த வெற்றி காவியம் 'நட்புக்காக' இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் சரத்குமார் என்ற ராசியான ஜோடி 'நட்புக்காக' படத்திலும் ஹிட் அடித்தது. தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா இப்படத்திற்கான கதையை எழுதி இருந்தார்.

இரட்டை வேடத்தில் சரத்குமார்

இப்படத்தில் முத்தையா (அப்பா)- சின்னையா (மகன்) என இரட்டை வேடத்தில் சரத்குமார் அசத்தியிருந்தார். விஜயகுமார், சிம்ரன், மனோரமா, சித்தாரா, சுஜாதா, மன்சூர் அலிகான், மனோ பாலா, ஆர்.சுந்தர்ராஜன், ரஞ்சித், செந்தில், அனுமோகன், மாஸ்டர் மகேந்திரன் என பெரிய ரசிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தனர்.

‘மீசைக்கார நண்பா’

தேனிசை தென்றல் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகின. 'அடிக்கிற கை அணைக்குமா'..'சின்ன சின்ன முந்திரியா'..'கருடா கருடா', 'மீசைக்கார நண்பா' உள்ளிட் பாடல்கள் இன்றைக்கு ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்த பாடல்களாக உள்ளன. குறிப்பாக தேவா பாடிய ‘மீசைக்கார நண்பா’ பாடல் இன்று வரை நட்பின் இலக்கண பாடலாய் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறது. எத்தனையோ திரைப்படங்கள் வெளிவந்திருந்தாலும் இன்றைக்கும் நட்புக்கு இலக்கணமாக திகழும் படங்களின் வரிசையில் 'நட்புக்காக' படத்திற்கு தனி இடம் உண்டு. அந்தவகையில் காலத்தால் அழியாத காவியமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றைக்கும் இந்தப் படம் பேசப்பட்டு வருகிறது.

விருதுகளை குவித்த 'நட்புக்காக'

தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமாரே இப்படத்தை தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து 'சினேகம் கோசம்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். தொடர்ந்து திக்காஜரு என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் மாநில அரசு விருது, பிலிம்பேர் விருதுகளை குவித்த இப்படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது.

26 ஆண்டுகள் நிறைவு

சரத்குமாரின் திரைவாழ்வில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்த 'நட்புக்காக' 1998 ஆம் ஆண்டு இதே ஜூன் 25-ஆம் நாள் வெளியானது. இன்றுடன் இப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. சமீபத்தில் ரிலீசானது போல் உள்ளது. ஆனால், 26 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் இது கே.எஸ். ரவிக்குமார் மற்றும் சரத்குமார் இருவரின் திரைப்பயணத்திலும் மிக முக்கியமான மைல்கல் திரைப்படம். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த மற்றொரு பொக்கிஷமாக இந்தப் படம் இன்றைக்கும் மக்களின் மனதில் நிலைத்து இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.