ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!

ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!

Marimuthu M HT Tamil
Dec 21, 2024 09:46 PM IST

ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!

ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!
ரஜினி எதுக்கு கூலினு வைச்சார்.. பாபாவுக்கு 4ஆயிரம் வயசு.. நான் 200 வருஷம் வாழக்கூடாதா.. ட்ரோல் செய்த சரத் குமார்!

அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சென்னையில் நடந்தது. அதில் அவர் பேசியதாவது, ‘’தி ஸ்மைல் மேன் என்னும் ஆங்கிலப்படம் வந்துவிட்டது. டைட்டிலுக்கு பஞ்சமா, இல்லை, கதைக்குப் பஞ்சமா. ஏற்கனவே ஆங்கிலத்தில் அந்தப் படம் வந்து ஹிட்டாகிவிட்டது. அதை தமிழில் எடுக்கக் காரணம் என்ன?

பதில்: அதே மாதிரி தான் டைட்டிலா இல்லை. ரஜினி சார் கூலி என்ற படத்தின் டைட்டிலை மீண்டும் பயன்படுத்தக் காரணம் என்ன. அதற்குண்டான தேவை இருந்தது, காரணம் இருந்தது. அதனால் வைத்துள்ளார்கள். எப்பப் பார்த்தாலும் நான் சிரிச்சிட்டு இருக்கேன். கூடவே, எங்கள் குழுவினர் எல்லாரும் வந்து சிரிச்சிட்டே இருக்காங்க. அதனால் தி ஸ்மைல் மேன் என்று பெயர் வைத்துவிட்டார், இயக்குநர்.

நீங்கள் பேசும்போது, கங்குவா படத்தின்போது சூர்யாவை கலாய்த்ததுபோல் இருந்தது?.

பதில்: ச்சீ.. ச்சீ.. நம்மளை இந்தப் படத்தை நல்லாயில்லைன்னு சொல்லி, நின்னுபோச்சுன்னா, அன்னைக்கு என்னைத் திட்டக் கூடாதுல. நான் நல்லமுறையில் நடிச்சிருக்கேன்னு சொல்லவந்தேன். நாம் எடுக்கிறது நல்ல படம் கொடுக்கணும் என்று தான் எடுப்போம். யாரும் வந்து ஃபிளாப் படம் கொடுக்கணும்னு படம் எடுக்குறது இல்லை. நேர்மை, உண்மையான உழைப்பு எல்லாம் இருந்திருக்கும். மக்கள் வந்து விரும்பலை என்பதை ஒன்றும் செய்யமுடியாது.இன்று மொபைல் போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் ரிப்போர்ட்டர். படம் பார்க்கும்போது முழுமையாகப் பார்த்திட்டு சொல்லணும்.

விமர்சனங்கள் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: கேவலமாக நடிச்சிருக்கார் சரத் குமார்னு சொன்னால் நான் ஏத்துக்கொள்வேன். அதை நினைத்து நான் வருத்தப்படமாட்டேன். அது தொடர்பான நியாயமான விமர்சனங்களைக் கூப்பிட்டு பத்திரிகையாளர்களிடம் கேட்பேன். அதுவே, பெர்ஷனல் லைஃப்பை அட்டாக் பண்றது தப்பு.

சாதிய வன்மத்துடன் என்றோ நடந்ததை எல்லாம் தோண்டி தோண்டி படம் எடுக்குறாங்க. அதை எப்படி பார்க்குறீங்க?

பதில்: என்னைப் பொறுத்தவரை, சமத்துவம். நம் கையைக் கீறி பார்த்தால் சிவப்பாக தான் ரத்தம் பாயும். இறைவனுடைய படைப்பில் நாம் அனைவரும் ஒன்று என்ற தத்துவத்தைக் கொண்ட நான், அதை அழுத்திச் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கா, இல்லையான்னு தெரியல. மனிதர்களை பல வகைப்படுத்தினாலும், அவர்கள் அனைவரும் ஒரு நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது உண்மை.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்களை கூத்தாடி என்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தேவைப்படும்போது பயன்படுத்திக்குவாங்க. தேவைப்படாதபோது கூத்தாடின்னு சொல்வாங்க. நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும்.

ராமதாஸ் அவர்களின் பேத்தி படமும் உங்கள் படம் ரிலீஸ் ஆகும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. அந்தப் போட்டியை எப்படி பார்க்குறீங்க?

பதில்: வாழ்த்துகள். போட்டியெல்லாம் கிடையாது. ஏழு நாட்கள் ஓடினால் வெற்றிப்படம் சொல்றீங்க. நான் வந்து 175 நாட்கள் ஓடிய படத்தைப் பார்த்தவன். மக்கள் மனதில் து நிலைத்து நிற்கிறதோ, அது வெற்றிப்படம்.

150 வயசு வரை வாழ்வேன்னு சொல்றீங்க. படமும் 150ஆவது படமும் வந்துவிட்டது. அது ஏன்?

பதில்: நான் 150 வயசுனு சொல்லல சார். இமயமலையில் இருக்கும் பாபாவிற்கு நான்காயிரம் வயசு. நமக்கு 200 வருஷம் வாழவேண்டாம்னு நினைக்குறீங்களா பாஸ். நான்காயிரம் வருஷம் பாபா இருக்கும்போது சரத்குமார் இருக்கக் கூடாதா. எனக்கு வயசே ஆகாது பாஸ். குழந்தை நட்சத்திரமாக இருக்கும் ஆழியா கூட ஜோடி போடலாம்.

சூர்ய வம்சம் 2 எப்போது சார்?

பதில்: விரைவில் செளத்ரி சார் அறிவிப்பு வெளியிடுவார்'' என பேசி முடித்தார், சரத் குமார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.