Suryavamsam 2: 26 ஆண்டுகள் நிறைவு; விரைவில் சூர்யவம்சம் 2 - சரத்குமார் கொடுத்த சர்ப்ரைஸ்!
26 Years of Suriyavamsam: சூர்யவம்சம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்தப்படத்தின் நாயகன் சரத்குமார் உறுதி செய்துள்ளார்.

நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் 'சூர்யவம்சம்'. இந்த படத்தில் தேவயானி, ராதிகா சரத்குமார், பிரியா ராமன் ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், நிழல்கள் ரவி, ரமேஷ் கண்ணா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருந்தார். எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக'நட்சத்திர ஜன்னலில்' பாடல் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கும் பாடலாக இன்றைக்கும் உள்ளது.
தந்தை, மகன் இடையிலான உறவுதான் இந்தப் படத்தின் மையக்கருவாக அமைந்திருக்கும். இதில் டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார் சரத்குமார். அப்பா கதாபாத்திரத்தில் சக்திவேல் கவுண்டராகவும், மகனாக சின்ராசு என்ற கதாபாத்திரத்திலும் சரத்குமாரே நடித்திருந்தார். அப்பா சரத்குமாருக்கு ஜோடியாக ராதிகாவும் மகன் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானியும் நடித்திருந்தனர்.
