Sarath Kumar: 'புரிஞ்சு போச்சு.. நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு போச்சு'- சரத் சம்பவம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sarath Kumar: 'புரிஞ்சு போச்சு.. நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு போச்சு'- சரத் சம்பவம்

Sarath Kumar: 'புரிஞ்சு போச்சு.. நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு போச்சு'- சரத் சம்பவம்

Malavica Natarajan HT Tamil
Jan 19, 2025 10:17 AM IST

Sarath Kumar: தன்னை வளைத்து வளைத்து கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை கிண்டல் செய்து பதிலளித்துள்ளார் நடிகர் சரத்குமார்.

Sarath Kumar: 'புரிஞ்சு போச்சு.. நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு போச்சு'- சரத் சம்பவம்
Sarath Kumar: 'புரிஞ்சு போச்சு.. நீங்க என்ன கேக்குறீங்கன்னு புரிஞ்சு போச்சு'- சரத் சம்பவம்

கண்ணப்பா படக்குழு

இவர், தற்போது, பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் கண்ணப்பா படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் பலரும் சரத்குமாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டனர். அப்போது, அவர், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கொஞ்சம் சூடாகவே பதில்களை அளித்தார். சில கேள்விகளுக்கு பத்திரிகையாளர்களையும் கிண்டல் செய்தார்.

கண்ணப்பா புராண படம்

பிரபாஸ், காஜல் அகர்வால், சரத்குமார், விஷ்ணு மஞ்ச், மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் வரலாற்றுத் திரைப்படம் கண்ணப்பா. ஹிந்தியில் மகாபாரதம் தொடரை இயக்கிய முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஏப்ரல் 25ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் நடிகர் சரத்குமாரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.

மதம் மாற்றவில்லை

அப்போது பேசிய சரத்குமார், மேகன் பாபு சாரோட நடிப்பையும், டயலாக் டெலிவரியையும் நான் பல முறை பார்த்திருக்கிறேன். அது என் நடிப்பை விட பலமடங்கு நன்றாக இருக்கும்.

இந்த படத்தை பார்த்த பின் எல்லாரும் சிவ பக்தனாக மாறுவார்கள் என பேசினார்கள். இதை நீங்கள் அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கு யாரும் மதம் மாற்ற வரவில்லை.

பக்தி அதிகரிக்கும்

அவர்கள் பேசியதற்கான அர்த்தம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை வரும். பக்தி உள்ளோருக்கு இன்னும் பக்தி அதிகரிக்கும் என்பது தான் அர்த்தம்.

இங்கு இருக்கும் பலருக்கும் சரித்திரம், வரலாறு எதுவும் தெரிவதில்லை. அவற்றை எல்லாம் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தான் கண்ணப்பா டீம் இறங்கியுள்ளது.

அர்ஜூனா அர்ஜூனா என ஆட முடியாது

இந்தப் படத்தில் என்ன நடிக்க வேண்டுமோ அதைத் தான் நடிக்க வேண்டும். புராண படத்தில் அர்ஜூனா வேடத்தில் நான் நடிக்கலாம். அங்கு நான் அர்ஜூனா அர்ஜூனா என பாட்டுக்கு டான்ஸ் எல்லாம் ஆட முடியாது. ஒருவேளை டைரக்டருக்கு அந்த மாதிரி தேவைப்பட்டால் நான் ஆடுவேன் என்றார்.

தனியா பேசலாம்

சமீப காலமாக அரிசியலிலும் சினிமாவிலும் ஆன்மீகம் சார்ந்தே இருக்கிறீர்கள் என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சரத் குமார், உங்களுக்கு அப்படி தோன்றியது என்றால் அதனை விளக்க தனியாக ஒரு பிர்ஸ் மீட் வைத்துக் கொள்ளலாம். இங்கு சாமி படத்தை பற்றி படம் எடுத்தால் சாமி பற்றி தான் பேச முடியும்.

வேறு ஏதாவது பேச வேண்டும் என்றால் தனியாக வாங்க நிறைய பேசலாம் என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.