HBD Sarath Kumar: பத்திரிகையாளர் முதல் சினிமா பயணம் வரை.. விடாமல் சாதித்து காட்டிய சரத் குமார்
HBD Sarath Kumar: நடிகர் சரத்குமார் இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

நடிகர் சரத்குமார், ஜூலை 14 ஆம் தேதி புது டெல்லியில் பிறந்தார். அவர் சென்னை, சிவகங்கை, தலைக்காவூர் பகுதியில் வளர்ந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை ராஜா முத்தையா உயர்நிலைப் பள்ளியிலும், சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்திலும் பயின்றார். அவர் கணிதத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றவர்.
சாயா அவரது முதல் மனைவி, அவர்களுக்கு பூஜா, வரலட்சுமி என்று இரு மகள்கள். பின்னர் 2001 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என ஒரு மகன் இருக்கிறார்.
பத்திரிகையாளர் டூ சினிமா
1974 ஆம் ஆண்டு மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி பட்டத்தை வென்ற பிறகு தினகரன் செய்தித்தாளில் பணியாற்றினார். அப்போது கிடைத்த அறிமுகதால் அடுத்ததாக சினிமா உலகில் நுழைந்தார்.
1986 ஆம் ஆண்டு சமாஜம்லோ மூலம், சரத்குமார் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் நடிகர் கார்த்திக்குடன் கண் சிமிட்டும் நேரம் திரைப்படத்தில் நடித்தார். அடுத்ததாக, அவர் விஜயகாந்த்துடன், புலன் விசாரணை படத்தில் படித்தார். அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இப்படம்.
சிறந்த வில்லன்
சரத் குமார் தனது நடிப்பிற்காக சிறந்த வில்லனுக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்ற பிறகு ஏராளமான திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார்.
அதன்பிறகு, விஷ்ணு, மகடு, பாலச்சந்துருடு போன்ற தெலுங்கு படங்களிலும், புது படகன், வேலை கிடைச்சுடுச்சு, ராஜா கைய வச்சா, என்கிட்ட மோதாதே, ஜகதலபிரதாபன் போன்ற தமிழ் படங்களிலும் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார்.
கெஸ்ட் ரோல்
2000 ஆம் ஆண்டில் பெண்ணின் மனதைத் தொட்டு மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸின் மாயி ஆகிய படங்களில் சரத் குமார் கெஸ்ட் தோற்றத்தில் நடித்தார். சர்ச்சைகள் இருந்தபோதிலும், மாயி பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. 2001 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுந்தர் சி.யின் ஆக்ஷன் திரைப்படமான ரிஷியில் நடித்தார். ஆர்.பி.சௌத்ரி தயாரித்து ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார்.
பல சிக்கல்களைச் சந்தித்த பிறகு, படம் இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அதன் பிறகு, அவர் எஸ்.ஏ.சந்திரசேகரின் தோஸ்தில் தோன்றினார். அவரது அடுத்த படமான சமுத்திரம், மனோஜ் பாரதிராஜா மற்றும் முரளியுடன் நடித்தார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கினார். சரத்குமார், ராடன் நிறுவனம் தயாரித்த கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியைத் திரையில் தோன்றி வழங்கினார் சரத்குமார்.
அரசியல் பயணம்
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்த சரத்குமார் 2006 ஆம் ஆண்டு வெளியேறினார்.
பின்னர் 2007 ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். தற்போது நடிப்பு ஒரு பக்கமும் அரசியல் மறுபக்கம் என பிஸியாக வலம் வருகிறார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்