தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Santhanam Latest Speech About Vadakkupatti Ramasamy Audio Launch

Actor Santhanam: ‘பாடையில பப்ளிசிட்டி.. ஹீரோவாகும் கூல் சுரேஷ்..’ - வச்சு செய்த சந்தானம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 27, 2024 05:33 PM IST

உடனே நான் அதற்கென்றுதான் ஒருவன் இருக்கிறானே என்று சொல்லி கூல் சுரேஷை சொன்னேன். அது ரொம்ப நல்ல கேரக்டர். இந்தப்படத்திற்கு பிறகு அவனுக்கு வேறொரு பேர் கிடைக்கும். காரணம் கூல் சுரேஷ் சம்பந்தமான காட்சிகள் எல்லாமே நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

நடிகர் சந்தானம்
நடிகர் சந்தானம்

ட்ரெண்டிங் செய்திகள்

நிகழ்ச்சியில் சந்தானம் பேசும் போது, “படத்தின் இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து..அண்ணே படத்தில் பாடையில் இருந்து கொண்டு பப்ளிசிட்டி தேடுவது போல ஒரு கேரக்டர் இருக்கிறது. யாரை செய்ய வைக்கலாம் என்று கேட்டார். 

உடனே நான் அதற்கென்றுதான் ஒருவன் இருக்கிறானே என்று சொல்லி கூல் சுரேஷை சொன்னேன். அது ரொம்ப நல்ல கேரக்டர். இந்தப்படத்திற்கு பிறகு அவனுக்கு வேறொரு பேர் கிடைக்கும். காரணம் கூல் சுரேஷ் சம்பந்தமான காட்சிகள் எல்லாமே நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. 

அவனும் நன்றாக நடித்திருக்கிறான். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் பெரிதாக எங்கும் கத்துவதில்லை என்று சொல்லி இருந்தான். ஆனால் பார்த்தால் அப்படி தெரியவில்லை. 

அடுத்ததாக ஹீரோவாக வேறு நடிக்கப்போகிறானாம். பேசும் போது என்னுடைய அழைப்பிதழை ஏற்று இங்கு வந்திருக்கும் என்று சொன்னான். இவனையே நாங்கள் தான் கூப்பிட்டோம். ஆனால், அதற்கிடையில் அவன் சிலரை கூட்டி வந்திருக்கிறான்.

மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 

65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள். என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி.

 ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். 

இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். 

ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார். எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள்!”

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.