தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Santhanam Comments On Vadakkupatti Ramasamy Movie Controversies

Vadakkupatti Ramasamy: 'யார் மனதையும் புண்படுத்தும் என்ன கடவுள் சத்தியமா கிடையாது!’ மேடையில் உருகிய சந்தானம்!

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 12:46 PM IST

‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ என்ற ஆடியோவுக்கு நா அந்த ராமாமி இல்ல’ என்ற வசனம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் குறித்து நடிகர் சந்தானம் பேச்சு
வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் குறித்து நடிகர் சந்தானம் பேச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

’டிக்கிலோனா’ திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் கதாநாயகான நடித்து உருவாகி உள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம்’ சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேகா ஆகாஷ், ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மெட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் 2ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ’ என்று இடம்பெற்றுள்ள வசனங்கள் சமூகவலைத்தளங்களில் பேசுபொருள் ஆனது.

தை பொங்கல் தினத்தன்று சந்தானம் வெளியிட்ட வீடியோவில், தனது வீட்டில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின்போது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தில் இடம்பெற்றும் ‘சாமி இல்லனு சொல்லிட்டு சுத்தன ராமசாமி தான நீ என்ற ஆடியோவுக்கு நா அந்த ராமாமி இல்ல’ என பதில் கூறும் டப்ஸ்மாஷ் வீடியோவை நடிகர் சந்தனம் ட்வீட் செய்து இருந்தார்.

இந்த வீடியோவை வெளியான சில நேரத்தில் சமூகவலைத்தளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திமுக மற்றும் பெரியாரிய இயக்கங்களின் ஆதரவாளர்களும், பாஜக ஆதரவாளர்களும் சந்தானத்தின் வீடியோவைக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சந்தானம் கூறுகையில், இந்த படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே நன்றாக வந்துள்ளது. தியேட்டரில் வந்து பார்க்கும் போது 2 மணி நேரம் போர் அடிக்காமல் கதையுள்ள, கருத்துள்ள படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு மீண்டும் ஒரு ஹிட் தேவைப்படுகிறது. 

இந்த படத்தை பற்றி நிறைய பிரச்னைகள் வருகிறது. அப்படியெல்லாம் படத்தில் எதுவும் இருக்காது. இது ஒரு ஜாலியான படம். வடக்குப்பட்டி ராமசாமி என்பவரின் படத்தைத்தான் கார்த்திக் எடுத்துள்ளார். வடக்குப்பட்டி ராமசாமி என்பது கவுண்டமணி சாரின் ஒரு டைலாக்தான். 

நான் சினிமாவுக்கு வந்தது மக்களாகிய உங்களை சிரிக்கவைப்பதற்காகத்தான். யார் மனதையும் புண்படுத்தவோ, யாரையும் தாக்கி பேச வேண்டும் என்ற எண்ணமோ எனக்கு சுத்தமாக கிடையாது. இது நான் கும்பிடும் கடவுளுக்கு தெரியும்.  உங்களை சிரிக்க வைப்பத மட்டும்தான் ஒரு வேலையா பண்ணீட்டு இருக்கேன்.  இந்த படத்தை குடும்பத்தோடு பார்த்த என் ஜாய் பண்ணுங்க. 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.