Actor Samuthirakani: 'மிஷ்கின் பேச்ச தப்பாவே நினைக்கல.. நீங்க எல்லாம் சிரிச்சீங்க தான..' கோவமான சமுத்திரகனி
Actor Samuthirakani: இளையராஜா குறித்த மிஷ்கினின் கருத்து தனக்கு தவறாக படவில்லை என்றும், பத்திரிகையாளர்களும் அவரது பேச்சை கேட்டு சிரித்ததாகவும் நடிகர் சமுத்திரகனி கூறியுள்ளார்.

Actor Samuthirakani: திரு. மாணிக்கம் படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர்கள், படத்தின் பெயருக்கு முன் திரு போடுகிறோம். ஆனால், எல்லாரும் போற்றும் இளையராஜாவை மிஷ்கின் மரியாதை குறைவாக பேசுகிறாரே என கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்வியால் கோவமான சமுத்திரகனி, இந்த விஷயம் தான் முடிந்துவிட்டதே. அவர் தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டாரே அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை. இது உங்களுக்கு போதவில்லையா எனக் கேட்டார்.
இது அவனோட இயல்பு
இருந்தும் விடாமல் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய வண்ணமே இருந்தனர். அப்போது, மிஷ்கின் பேசியதற்கு அவரே விளக்கம் கொடுத்துவிட்டார். இது அன்பின் வெளிப்பாடு. இது தன் உணர்வுகளின் உச்சமாக அவர் பேசிவிட்டார். என்னைக் கூட கெட்டவார்த்தை எல்லாம் சொல்லி முதுகில் அடிச்சு தான் பேசுவான். அது அவனோட இயல்பு.