Samuthirakani: அப்போது விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்.. இப்ராஹிம் சார் தேம்பி தேம்பி அழுறார்.. சமுத்திரக்கனி
Samuthirakani: விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்.. இப்ராஹிம் சார் தேம்பி தேம்பி அழுறார் என உன்னைச்சரணடைந்தேன் படத்தின் ரிலீஸின்போது நடந்த சம்பவத்தை இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்

Samuthirakani: அது விஜயகாந்த் அண்ணனிடம் இருந்து பிரிந்த சமயம்; இப்ராஹிம் சார் உன்னைச்சரணடைந்தேன் பார்த்திட்டு தேம்பி தேம்பி அழுதார் என சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியிடம் ஆவுடையப்பன் சினி உலகம் யூட்யூப் சேனலுக்காக நடத்திய நேர்காணலின் தொகுப்பினைக் காணலாம்.
அதில், ’அப்பா மற்றும் சாட்டை பார்த்துவிட்டு உங்களை நெகிழவைத்த ரெஸ்பான்ஸ் பற்றி சொல்லுங்க?
முதலில் சத்தியமங்கலத்தில் இருக்கும் பள்ளியில் பிரேயரில் தலைமையாசிரியர் அப்பா படத்தைப் பற்றி சொல்லியிருக்கிறார், இதை மாணவர்களாகிய நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து பார்த்திட்டு என்கிட்ட சொல்லணும்னு சர்க்குலர் விட்டிருக்கிறார். அந்த சர்க்குலர் எனக்கு வருது. அப்ப தான் நினைச்சேன். நாம் எதற்கு வந்தோம் என்று. இன்னும் என் ஊரில் வீட்டிற்குப் போகவேண்டும் என்றால் நடந்து தான் போகணும். கார் போகாது. குறுகலான பாதையாக இருக்கும். முதலில் சென்னையில் யாரையுமே தெரியாது, இப்படிப்பட்ட ஊரில் இருந்து சென்னை போய், ஒரு வேலையைச் செய்துகொண்டு இருக்கோம் என்றால் ஒரு காரணம் இருக்கணும்ல, மனதிற்குள் தோன்றும் அந்த கேள்விக்கான விடையாகத்தான் பார்த்தேன்.
சாட்டை ஆகட்டும், அப்பா திரைப்படம் ஆகட்டும். அதனால் முன்பின் தெரியாதவர்கள் அரவணைச்சுக்கிற விஷயம் ஆகட்டும் நம் மனதில் எழும் கேள்விக்கான பதில் தான். இப்படி தான் தேனி - கம்பத்தில் வந்து ஒரு பாட்டி ரோட்டில் என்னையைப் பார்த்திட்டு ஓடி வருது. குறுக்க லாரிக்காரன் வரான். அவனை நிறுத்திட்டு, வீட்டில் கறிக்குழம்பு வைச்சிருக்கேன் வந்து சாப்பிட்டு போன்னு சொல்லுச்சு. இது எங்கிருந்து வரும். இதெல்லாம் உண்மையாகப் பயணப்படும்போதுதான் கிடைக்கும். அப்பா படம் முடிச்சதுக்குப் பின் ஒரு படம் எழுதிமுடிச்சு, இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் எழுதி முடிச்சேன். கூடியவிரைவில் சூட்டிங் போகணும். இந்த மாதிரி படைப்புகள் பேசும்போது, நம் மனதில் இருக்கிறவன் பேசுவான். பல படங்கள் நடித்தாலும் உள்ளே இருக்கிறவனை உயிரோடு வைக்க சில படங்கள் பண்ணுவேன். சமீபத்தில் மலையாளத்தில் அப்படி ஒரு படம் பண்ணியிருக்கேன். சர்வைவலுக்காக ஒன்றும் மனதிற்காக சில விஷயங்களும் செய்யணும். வேறுவழியில்லை.
நீங்கள் விருப்பப்பட்டு பண்ற படம் வெற்றி அடையுது?
அப்பா படம் பெயரில் நல்ல வெற்றிப்படம் தான். ஆனால், எனக்கு லாபம் இல்லை. அதை வாங்கியவர்கள் நல்ல சம்பாதிச்சாங்க. எடுத்துக்கிட்டாங்க. எனக்கு ஒன்றரை கோடி ரூபாய், அந்தப் படத்தில் நஷ்டம் தான். அடுத்த படத்தில் சம்பாதிச்சுக்கலாம் என்ற நம்பிக்கை தான். அடுத்த சாட்டை படத்தில் 2 கோடி ரூபாய் நஷ்டம். நாடோடிகள் 2 பண்ணுனோம். இதில் என்னவென்றால், இதையெல்லாம் தாங்கிற சக்தி இருக்கணும். இதற்காக தான் தெலுங்கு படங்களில் எல்லாம் நடிப்போம். ஒரு படத்தை எடுக்க, 120 நாட்கள் ஆகும். இப்படியிருக்கிறதற்கு மாதமாதம் பணம் வந்துவிடாது. ஆனால், வெளியில் பார்க்கிறவங்களுக்குப் பெரிசாக தெரியும். அப்படி படம் படம் என்று ஓடுற ஆளும் கிடையாது.
மேலும் படிக்க: நடிகர் ஸ்ரீமன் பிறந்த நாள் தொடர்புடைய கட்டுரை
மேலும் படிக்க: உதயம் தியேட்டர் பற்றி உருகிய நடிகர்
மேலும் படிக்க: சமுத்திரக்கனியின் இந்த பேட்டியை பார்த்திடுங்க
படம் வெளியாகும்போது கவனிக்கப்படாமல் சில படங்கள் போய்விடுது? அதுபற்றி?
அது விதைக்கப்பட்டது தான். உன்னைச் சரணடைந்தேன் திரைப்படத்தை இப்போது வரைக்கும் பேசுவாங்க. அதைக் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்த இப்ராஹிம் சார், தியேட்டரை விட்டு வெளியே வரவே இல்லை. அப்போது தான் அண்ணன் விஜயகாந்திடம் இருந்து பிரிந்த சமயம். என்னை தியேட்டருக்குள் அழைக்கிறார்கள். அவ்வளவு பெரிய உருவம் தேம்பித்தேம்பி அழுது. என்னைப்பிடிச்சிட்டு அழுகிறார்.அதுதான் வெற்றி. நம்ம ஆடியன்ஸ் வேற. என்ன லேட்டாக கொண்டாடுவாங்க. அடுத்து அந்த சூட்சமத்தைக் கண்டுபிடிச்சதுதான், நாடோடிகள். அப்பா திரைப்படம் முதல் நாளே ஃபுல் ஆச்சு. ஆடியன்ஸுக்கு எல்லாமே தெரியும்’’ என்றார்.
நன்றி: சினி உலகம்

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்