Salman Khan: 'ராஷ்மிகாவுக்கு பொன்னு பொறந்தா அவளோடவும் நான் ஜோடியா நடிப்பேன்' ட்ரோல்களுக்கு பதிலடி தந்த சல்மான் கான்
Salman Khan: ராஷ்மிகாவுடன் தனக்கு உள்ள வயது வித்தியாசத்தை பலரும் கிண்டல் செய்த நிலையில், ராஷ்மிகா மட்டுமல்ல அவளுக்கு பெண் பிறந்தால் கூட அவளுடனும் நடிப்பேன் என நடிகர் சல்மான் கான் கூறியுள்ளார்.

Salman Khan: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான்- ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் 'சிகந்தர்'. இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் கான் அவர்களது கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பட நிகழ்ச்சியில் பதில்
அப்போது, 59 வயதான சல்மான் கானுக்கும் 28 வயதான ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையேயான வயது வித்தியாசம் படத்தின் மீது பல கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது என சல்மான் கான் கூறி அதற்கு பதிலளித்தார். அப்போது, இந்த விஷயத்தில் ரஷ்மிகாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையென்றால், மற்றவர்களுக்கு ஏன் பிரச்சனை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ராஷ்மிகா பொன்னோடவும் நடிப்பேன்
சல்மான் கான் இத்தனை வயதிலும் பார்க்க நன்றாக அழகிய தோற்றத்துடன் இருப்பதாக தொகுப்பாளர் பாராட்டியபோது, அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த சமயத்தில் "ஹீரோயினுக்கும் எனக்கும் 31 வயது வித்தியாசம் இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அது ஹீரோயினுக்குப் பிரச்சனை இல்லை, அவள் அப்பாவுக்கும் பிரச்சனை இல்லை என்றால், உங்களுக்கு ஏன் பிரச்சனை ஆகிறது?. அவள் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்ற பிறகும், அவளுடைய மகளுடனும் நான் நடிப்பேன். அப்போதும் அம்மாவாக ராஷ்மிகாவின் அனுமதி கிடைக்கும்” என்றார். இதைக் கேட்ட ராஷ்மிகா சிரித்துக் கொண்டே சல்மான் கானின் கருத்துக்கு தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.
புஷ்பா நாயகிக்கு பாராட்டு
மேலும், 59 வயதான சல்மான், 28 வயதான ரஷ்மிகாவைப் பாராட்டினார். 'புஷ்பா' படத்தின் நாயகியின் உறுதியை அவர் மிகவும் பாராட்டினார். "அவங்க சிறப்பா நடிச்சிருக்காங்க. 'புஷ்பா 2' படப்பிடிப்பு மாலை 7 மணிக்கு முடியும். 9 மணிக்கு எங்களோட சேர்ந்து, காலை 6.30 மணி வரை வேலை செஞ்சுட்டு, 'புஷ்பா 2' படப்பிடிப்புக்குப் போயிடுவாங்க. கால் முறிஞ்சு ஓய்வெடுக்க வேண்டிய சமயத்துலயும் அவங்க எங்களோட படப்பிடிப்பை ரத்து பண்ணல. ஒரு நாள்கூட லீவ் எடுக்கல. இளம் வயசுல எனக்கு ரொம்ப ஞாபகம் வர வைக்கிறாங்க" என்று பாராட்டினார்.
சிக்கந்தர் டிரைலர் வெளியீடு
சிக்கந்தர் படத்தின் டிரெயிலரில் சல்மான் கான் அசாத்தியமான தோற்றத்தில் உள்ளார். மும்பையில் குற்றச் சாம்ராஜ்யத்தை ஒழிப்பதற்கான சல்மான் கானின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. ரஷ்மிகா சல்மான் கானின் காதல் கதை நன்றாக உள்ளது என சிலர் கூறுகின்றனர்.
சிக்கந்தர் படக்குழு
சல்மான் கானின் 'சிகந்தர்' படம் 2025 ஈத் பண்டிகையில் திரையரங்குகளில் வெளியாகிறது. 'கஜினி', 'துப்பாக்கி', 'ஹாலிடே: ஏ சொல்டியர் இஸ் நெவர் ஆஃப் டூட்டி', 'சர்க்கார்' போன்ற தமிழ் மற்றும் இந்தி படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கஜல் அகர்வால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சாஜித் நாடியாத்வாலாவின் நாடியாத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
