தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Silk Smitha: ‘ஊட்டி விடும் அளவுக்கு நெருக்கம்.. காமம் இல்லா காதல்.. ஒரே பெட்டில்..’ - சில்க் உறவு குறித்து ரவிகாந்த்!

Silk Smitha: ‘ஊட்டி விடும் அளவுக்கு நெருக்கம்.. காமம் இல்லா காதல்.. ஒரே பெட்டில்..’ - சில்க் உறவு குறித்து ரவிகாந்த்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 10, 2024 08:15 PM IST

Silk Smitha: அவள் வற்புறுத்தியதால் நான் சென்றேன். அப்போது எனக்கு ஒரு நாள் அவள் எனக்கு மாலை விருந்து அளித்தார். அப்படி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று எனக்கு ஊட்டி விட்டாள்.

Silk Smitha: ‘ஊட்டி விடும் அளவுக்கு நெருக்கம்.. காமம் இல்லா காதல்.. ஒரே பெட்டில்..’ - சில்க் உறவு குறித்து ரவிகாந்த்!
Silk Smitha: ‘ஊட்டி விடும் அளவுக்கு நெருக்கம்.. காமம் இல்லா காதல்.. ஒரே பெட்டில்..’ - சில்க் உறவு குறித்து ரவிகாந்த்! (kalki online, one india )

பிரபல நடிகரான ரவிகாந்த் தனக்கும் சில்க் ஸ்மிதாவிற்கும் இடையே இருந்த காதல் குறித்து பேசி இருக்கிறார்.

இது குறித்து டேக் 1 சேனலுக்கு பேசும் போது, “அப்போது நாங்கள் அமெரிக்கா சென்று வந்திருந்தோம். அம்மா கிரியேஷன்ஸ் சிவா ஈரோட்டில் கச்சேரி ஒன்றை நடத்தினார். அங்கே பிரபு தேவா, கிங் காங், அமர்நாத் உள்ளிட்ட அனைவரும் சென்றிருந்தோம். சில்க் ஸ்மிதாவும் எங்களுடன் வந்திருந்தார். மாலைதான் கச்சேரி என்றாலும், நாங்கள் காலையிலேயே அங்கு சென்று விட்டோம். 

விஜய லட்சுமிதான் அவர் பெயர் 

உண்மையில், சில்க் ஸ்மிதாவின் பெயர் விஜயலட்சுமிதான். அவளுக்கு அங்கு பெரிதாக வேலை இல்லாமல் இருந்த நிலையில், சில்க் ஸ்மிதா அமர்நாத்திடம் சென்று, எல்லோருக்கும் ஏதாவது ஒரு ப்ரோகிராம் இருக்கிறது. எனக்கு ஒன்றுமே இல்லையே என்று கேட்டார். உடனே அவர் ரவியிடம் செல், அவர் ஏதாவது உனக்கு எழுதி கொடுப்பார் என்று சொல்லி, ஸ்மிதாவை என்னிடம் அனுப்பி வைத்தார். 

இதையடுத்து சில்க் ஸ்மிதாவின் பெட்டில், நானும் அவரும் உட்கார்ந்து, ப்ரோகிராம் சம்பந்தமாக, அதை இப்படி செய்யலாம் இதை அப்படி செய்யலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். அந்தக் கச்சேரியில்  ‘கண்மணி அன்போடு’ பாடலை, நானும் சில்க் ஸ்மிதாவும் சேர்ந்தே பாடினோம். அந்த கச்சேரி மிக மிக நன்றாக சென்றது. 

ட்ரெண்டிங் செய்திகள்

அவளுக்கும் எனக்கு இருந்த காதல்

இதையடுத்து நாங்கள் அனைவரும் சென்னைக்கு வந்தோம். மூன்று நாட்கள் கழித்து சில்க் ஸ்மிதா, என்னை அழைத்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் வீட்டில் தான் இருக்கிறேன் என்று சொன்னவுடன், வீட்டிற்கு வர முடியுமா என்று கேட்டார். அப்போது அவரது வீடு பிரசாத் ஸ்டுடியோவிற்கு பின்னால் இருந்தது. இதனையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர், லண்டன் தெலுங்கு சங்கமத்தில் இருந்து தன்னை அழைத்து இருப்பதாகவும், நீங்கள் என்னுடன் வந்தால், நான் சௌகரியமாக உணர்வேன் என்றும் கூறினார். 

உடனே நான், அதற்கென்ன தாரளமாக வருகிறேன் என்று கூறினேன். இருப்பினும், எனக்கு தெலுங்கு தெரியாதே என்று சொன்னவுடன் பரவாயில்லை, நீங்கள் தமிழில் சொல்லுங்கள், நான் தெலுங்கில் எழுதிக் கொள்கிறேன் என்று கூறினார். இதையடுத்து அவர், அது தொடர்பான வேலைகளுக்காக என்னை தினமும் வீட்டிற்கு அழைத்தாள். நான் முதலில் வர மறுத்தேன். 

இறந்து போனாள்

இருப்பினும், அவள் வற்புறுத்தியதால் நான் சென்றேன். அப்போது எனக்கு ஒரு நாள் அவள் எனக்கு மாலை விருந்து அளித்தார். அப்படி பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று எனக்கு ஊட்டி விட்டாள். அப்போது நானும் அதை வாங்கி சாப்பிட்டேன். அதன் பின்னர், நானும் அவளும் அவ்வளவு நெருக்கமானோம். அவளது பர்சனல் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டாள். 

இதையடுத்து, நாங்கள் கிட்டத்தட்ட காதலே செய்ய ஆரம்பித்து விட்டோம் என்று சொல்லலாம். ஆனால், அது காமம் இல்லாத காதல் என்று தான் நான் சொல்ல வேண்டும். ஆமாம், இருவருக்கும் இடையே அக்கறை நிறைந்த ஒரு காதல் இருந்தது. அவளது பிரச்சினைகளுக்கெல்லாம் நான் மிகவும் நகைச்சுவையாகவே அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தேன். வழக்கம் போல சரி, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பி வந்தேன். அடுத்த நாள் பார்த்தால், பேப்பரில் அவர் இறந்து விட்டதாக செய்தி வந்தது அதிர்ந்தே போய் விட்டேன்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: