Ravi Mohan 34: அரசியல்.. ஆர்.கே.நகர்.. மாண்புமிகு மரியாதை.. புது கதைக் களத்தில் கலைகட்டும் ரவி மோகன்..
Ravi Mohan 34: நடிகர் ரவி மோகன் இதுவரை இல்லாத வகையில், அரசியல் கதைக் களத்தில் நடித்துள்ள படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Ravi Mohan 34: நடிகர் ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் சில நாட்களுக்கு முன் பொங்கலுக்கு ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படம், மாறிவரும் சமூக சூழலில் காதல் எத்தகைய பரிமாற்றத்தை பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்ததால் எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றது.
ரவியின் 34வது படத்தின் டைட்டில்
இந்நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வரும் நிலையில், அவரது 34வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் மெகாஹிட் அடித்த டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு, தனது அடுத்த படைப்பை ரவி மோகனுடன் இணைந்து உருவாக்கி வருகிறார். இந்தப் படம் அரசியல் கதைக் களத்தை கொண்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாகவே டைட்டில் டீசரும் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையில் காரசாரம்
இந்த டீசர், சட்டப்பேரவையில் நடைபெறும் காரசார விவாதம் தான் படத்தின் டைட்டில். ரவி மோகனின் உண்மையான பெயரை அறிந்துகொள்ள துடிக்கும் ஆளும் கட்சியினருக்கு பதில் சொல்வதற்கு முன் அசத்தலான டயலாக் எல்லாம் வைத்துள்ளார் இயக்குநர்.
ரவி மோகன் ஆர்.கே.நகரின் எதிர்கட்சியை சேர்ந்த எம்எல்ஏவாக நடித்துள்ளார். இவரது கட்சித் தலைவராக கே.எஸ்.ரவிக்குமாரும், ஆளும் கட்சியின் முதலமைச்சராக இருக்கிறார் நாசர், நாசரின் கட்சியினர் சண்முக பாபு என அறியப்படும் ஆற்.கே.நகரின் எம்எல்ஏ உண்மையான பெயரை கூறுமாறு அமளியில் ஈடுபடுகின்றனர்.
பாட்ஷா பாணியில் டைட்டில்
அதற்காக, பெயரின் முக்கியத்துவத்தையும், மெட்ராஸ் தமிழ்நாடான கதையையும், தமிழ்நாடு தமிழகம் ஆகாமல் இருப்பதற்கான அரசியலையும் பேசியிருப்பார் நாசர்.
இதுகுறித்த அவரது தமிழ் உரையாடலை பாரட்டிய சண்முக பாபு, 17 வருடங்களுக்கு முன், ஆர்.கே.நகர் மக்கள் தன்னை எப்படி அழைத்தார்கள் என சொல்ல நினைக்கிறார். அதனை தனக்கு இன்னொரு பெயரும் இருக்கு என பாட்ஷா படத்தின் டயலாக் போல பேசி இருக்கிறார்.
கராத்தே பாபு
அந்தப் பெயர் தான் கராத்தே பாபு. இந்தப் படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். சண்முக ராஜா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், கதிரேஷ் அழகேசன் படத்தொகுப்பாளராகவும் திலீப் சுப்பராயன் சண்டை இயக்குநராகவும் எழில் அரசு ஒளிப்பதிவு இயக்குநராகவும் சுந்தர் ஆறுமுகம் தயாரித்தும் உள்ளார்.
கராத்தே பாபு படக்குழு
இந்தப் படத்திற்கு ரத்ன குமார், பாக்கியம் சங்கர் ஆகியோர் இணைந்து கதை எழுதி உள்ளனர். ரவி மோகனின் இந்த 34வது படத்தின் படப்பிடிப்பு தற்போகு படபடப்பாக நடந்து வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
ரவியின் முயற்சி
இதுவரை சாக்லெட் பாயாக நடித்து வந்த ரவி தற்போது, தன் நடிப்பை வெவ்வேறு பரிணாமத்திற்கு கொண்டு செல்ல முயன்று தற்போது அரசியல் களத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன், ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள ஜீனி படமும், சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னை வில்லனாகவும் அடையாளப்படுத்தி உள்ளார் ரவி.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்