கண்ணுங்களா.. செல்லங்களா.. போயிட்டு வரட்டா! பிக்பாஸில் இருந்து வெளியேறும் ரஞ்சித்!
பிக்பாஸ் வீட்டில் கோவத்தை காட்டாமல் அன்பால் அனைவரையும் நட்பாக்கி வந்த ரஞ்சித் இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொழுதுபோக்கு அம்சம் குறைந்து வருவதால் சில அதிரடி முடிவுகளை நிகழ்ச்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 வாரங்களாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை என 2 தினங்களிலும் போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டனர்.
கேப்டன்சி டாஸ்க் ரத்து
மேலும், இந்த வாரத்தில் நடந்த கேப்டன்சி டாஸ்கில் பிக்பாஸ் அறிவுறுத்தலையும் மீறி போட்டியாளர்கள் விட்டுக் கொடுத்து விளையாடியதால், இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் ரத்து செய்யப்பட்டதுடன் இனி ஃபிரி நாமினேஷன் பாஸ் வழங்கப்பட மாட்டாது என்றும் பிக்பாஸ் திட்டவட்டமாக அறிவித்தது. இதனால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் சோகத்தில் உள்ளனர்.
டிஆர்பி ரேட்டிங்கில் சரிவு
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.