Kavundampalayam Movie: மிரட்டல் எதிரொலி! கவுண்டம்பாளையம் ரிலீஸ் நிறுத்தம்! நடிகர் ரஞ்சித் வேதனை பேட்டி!
Kavundampalayam Movie: எனக்கு எப்படி பெயர் சொல்வது என்று தெரியவில்லை. எங்கிருந்து வருகின்றனர் என்பது தியேட்டர் அதிபர்கள் சொல்லும்போது கஷ்டமாக உள்ளது. சொல்பவர்கள் தங்கள் சுயவிவரங்களை மறைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். தியேட்டர் அதிபர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடிகர் ரஞ்சித் பேட்டி

நாளைக்கு திரைக்கு வரவிருந்த கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கவுண்டம்பாளையம் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு குழந்தையை சீராடி, தாலாடி இந்த படத்தை எடுத்தோம். ஆனால் அந்த படத்திற்கு முட்டுக்கட்டையாக சில விஷயங்கள் நடந்து உள்ளது. இந்த படத்தில் உள்ள சிக்கல்களை தீர்க்க செய்தித்துறை அமைச்சர், டிஜிபியை முறையிட்ட திட்டமிட்டு உள்ளோம். முடிந்தால் முதல்வரையும் சந்திக்க தயாராக உள்ளோம்.
மிரட்டுவது யார்?
எனக்கு எப்படி பெயர் சொல்வது என்று தெரியவில்லை. எங்கிருந்து வருகின்றனர் என்பது தியேட்டர் அதிபர்கள் சொல்லும்போது கஷ்டமாக உள்ளது. சொல்பவர்கள் தங்கள் சுயவிவரங்களை மறைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர். தியேட்டர் அதிபர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என மிரட்டல்கள் வருகின்றது. நமக்கு கடவுள்தான் துணை, ரவுடிசமோ, வன்முறையோ எதுவும் தெரியாது.
தமிழக அரசிடம் முறையிட முடிவு செய்து உள்ளோம். அரசின் ஆதரவில் பாதுகாப்பு உடன் இந்த படம் மக்களை சென்று அடையும்.
எந்த அரசியல் அமைப்பு மீது சந்தேகம் உள்ளது?
எனக்கு தெரியவில்லை, நிறைய போன் வருகின்றது என சொல்கின்றனர். ஒரு படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். எனது படத்தின் தயாரிப்பாளர்கள் சாதாரண விவசாயிகள்தான், பெரிய கோடீஸ்வரர்கள் கிடையாது.
நாளை ரிலீஸ் ஆகும் சூழலில், இன்று மாலை எல்லோரும் எங்களை கைவிட்டால் நாங்கள் என்ன செய்வது. திரையரங்கு உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அவர்களின் அச்சுறுத்தலை போக்கும் வகையில் வேறு நல்ல நாளில் திரைப்படத்தை திரையிட உள்ளோம்.
போலீஸ் பாதுகாப்பு உடன் திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளோம். தமிழகம் முழுவதும் நிறைய இடங்களில் எதிர்ப்பலை உள்ளது. இதனால் நமக்கு பலர் தியேட்டர் தர மறுக்கின்றனர்.
உங்களுக்கு எல்லாம் தெரியும். இது குறித்து நிறைய விஷயங்களை பேசி உள்ளேன். நான் எந்த தவறான கருத்துகளையும் சித்தரித்து பேசுபவன் இல்லை. நான் அரசியல்வாதி இல்லை. அதுபோல்தான் நான் நல்ல படத்தை எடுத்து உள்ளேன். யார் மிரட்டுகின்றனர் என்பதை ஊர்ஜிதமாக சொல்ல முடியவில்லை. இந்த படத்தின் வெற்றிதான் அவர்களுக்கு தரும் பதில் அடியாக இருக்கும்.
சென்சார் சான்று வாங்கிய படத்தை வெளியிட முடியாதது வருத்தமாக உள்ளது. யாருடைய மனமும் காயப்படாத வகையில் இந்த படம் இருக்கும். கருத்துரிமை என்று பேசும் எத்தனையோ நபர்கள் உள்ளனர். ஆனால் திரை வழியாக எனது கருத்துரிமை மறுக்கப்படுவது வேதனைக்கு உரியதாக உள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக முதலமைச்சரை சந்திக்க முயற்சிப்பேன்.
பிரச்னைகள் மூலம் விளம்பரம் தேடிக் கொள்பவன் நான் அல்ல, பெற்றோர்களுக்கு ஆதரவாக நாடக காதல் என்ற அடிப்படையில் ஒரு படம் எடுத்தேன். ஆனால் அதற்கு பின் இவ்வளவு பிரச்னை நடந்து வருகின்றது. இந்த செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9
இந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்