உனக்குத் தகுதியான எதுவும் உன்னை விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி பளீச் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உனக்குத் தகுதியான எதுவும் உன்னை விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி பளீச் பேட்டி

உனக்குத் தகுதியான எதுவும் உன்னை விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி பளீச் பேட்டி

Marimuthu M HT Tamil
Dec 14, 2024 04:01 PM IST

உனக்குத் தகுதியான எதுவும் உன்னைவிட்டுப் விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும் என ராம்கி பளீச் என பேட்டியளித்துள்ளார்.

உனக்குத் தகுதியான எதுவும் உன்னைவிட்டுப் விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி
உனக்குத் தகுதியான எதுவும் உன்னைவிட்டுப் விட்டுப்போகாது.. உன்னை வந்தே சேரும்.. ராம்கி

செந்தூரப்பூவே, இணைந்த கைகள், சின்னப்பூவே மெல்ல பேசு, அம்மாபிள்ளை, மருதுபாண்டி போன்ற படங்கள் மூலம் 1980-90-களில் கொடிகட்டிப் பறந்தவர், ராம்கி.

சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் ராம்கி பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘ஒரு பணம் இல்லாத யாசகருக்கு ரூ.500 கொடுக்கும்போது அவங்களோட ஆச்சரிய ரியாக்‌ஷன் பிடிக்கும். அஜித் ஒரு படத்தில் சொல்லியிருப்பார். உனக்குக் கீழே இருக்கிறவனை நீ நல்லா வைச்சுக்கிட்ட, உனக்கு மேல இருக்குறவன் உங்களை நல்லா வச்சுக்குவான் என்று. எனக்கு ரொம்பப் பிடிச்ச மேட்டர். அதை நான் செஞ்சு பார்ப்பேன்.

லக்கி பாஸ்கர் ஆண்டனியை விரும்பும் மக்கள்:

லக்கி பாஸ்கர் ஆண்டனி மாதிரி ஒருத்தர் கிடைக்கமாட்டாங்களா அப்படிங்கிறது என்னவென்றால், எனக்கு உண்மையாக இருக்கமாட்டாங்களா, எனக்கு ஒருத்தவங்க தோள் கொடுக்கமாட்டாங்களா அப்படிங்கிறது தான். உதவிக்கு ஒரு ஆள் கிடைக்காதா. கஷ்டத்தில் இருந்து ஒருத்தன் நம்மைக் காப்பாற்றிவிட்டுடமாட்டானா என்பது நியாயமான எதிர்பார்ப்புதான். அது கிடைக்கவும் செய்யுது. என் வாழ்க்கையில் நிறைய ஆண்டனி வந்திருக்காங்க.

நான் ஜெயிக்கணும்னு பல பேர் இருந்திருக்காங்க. நன்றி என்பது காலையில் இருந்து இரவு வரை, பல உதவிகள் பண்ணுனவங்களுக்கு நன்றி சொல்லணும்.

இது நம் கடமை. நான் நன்றி சொல்வதையே விட்டுட்டேன் என்றால் நல்லது நடக்குறது தள்ளிப்போகப்போகுது என்று தான் அர்த்தம். நன்றியாக இருக்கணும் என்பது நாம் இருந்தே ஆகவேண்டிய விஷயம். வேறு வழியே இல்லை. ஆண்டனி நமக்கு பல விஷயங்களில் வருவார். ஒரு புத்தகத்தினை எடுத்துப் பார்க்கும்போது, எனக்கு வாசகம் தெரியுது. அதுதான் ஆண்டனி.

அவசரப்படக்கூடாது - ராம்கி:

அதில், உன் வாழ்க்கையில் நீ நினைத்த அனைத்தும் கிடைத்துவிடுவதில்லை. ஆனால், உனக்குத் தகுதியான எதுவும் உன்னைவிட்டுப் போகாது. உன்னை வந்தே அடையும்.

நாம் அதுக்குள் அவசரப்பட்டுடக்கூடாது. யூனிவர்ஸ் கொடுக்கும்போது கொடுக்கும். அந்த பொறுமை வேண்டும். நிறையபேர் சொல்லும்போது, பொறாத  காலம் என்று சொல்வாங்க. அது பொறுமையில்லாத காலம் என்று தான் அர்த்தம்.  

இங்கு சீனியர் ஆர்டிஸ்ட் அப்படிங்கிற டேக் இருக்கு. லெஜண்ட்ரி ஆர்ட்டிஸ்ட் அப்படின்னு சொல்வாங்க. பக்கத்தில், ஆந்திராவுக்குப் போகிறோம். அங்கு சட்டுனு காலில் விழுவாங்க. உடனே, நல்லாயிருன்னு சொல்வோம். நான் எங்க சீனியர்கிட்ட செய்திருக்கேன். சிவாஜி அப்பாகிட்ட கையைக் கட்டி பயந்து நிற்போம். ரவிச்சந்திரன் சார், விஜயகாந்த் சார்கிட்ட ரொம்ப மரியாதையாக இருப்போம். ஹீரோயின்ஸ் காலில் சட்டுனு விழுந்திடுவாங்க ஆந்திராவுக்கு போனால், நம்மளைப் புகழ்வாங்க. கேட்கும்போது நல்லாயிருக்கும்.

தெலுங்கில் வசனம் பேசுவது கஷ்டம் - ராம்கி

அப்படியே நைஸாக வந்து ஹீரோ கிளம்பப்போறார்னு சொல்வாங்க. அவர் கிளம்புறதுக்குள்ள பேசணும். 15 வரிங்க, அதுவும் தெலுங்கு. எமோஷனல்ங்க. அதுவும் கத்திபேசணும். கத்தி பேசுறதை காமெடியா பண்ணுனீங்க என்றால் ஊரே சிரிக்காது. அப்பதான் நம்மளை லெஜண்ட்ரினு சொல்லிட்டுப்போயிருப்பான் ஒருத்தன். மனசுக்குள்ள பெரிய சவால் ஆக இருக்கும்.

சீனியாரிட்டிக்குப் பின்னாடி ஒரு பெரிய பொறுப்பு இருக்கும். ஒன் மோர் டேக் போனால், அந்த இழுக்குப்போயிடும். கொடுக்கப்பட்ட டைமுக்குள்ள மனப்பாடம் பண்றது. இப்படி தான் நிலைமை. அந்தப் பெயரை காப்பாத்திறதுக்காக கடுமையாக உழைக்கணும். லக்கி பாஸ்கர் பட ஓடிடியில் ரிலீஸானபிறகு, ஆண்டனி கேரக்டர் படத்தைப்போட்டு, இப்படி ஒருத்தன் நம்ம லைஃபில் கிடைக்கமாட்டானா என மீம் போடுறது, ரொம்ப சந்தோஷமாக இருக்கு. மீம் கிரியேட்டருக்கு நன்றி’’ எனத் தெரிவித்தார், நடிகர் ராம்கி.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.