Rajinikanth: ரஜினியின் ராஜ தந்திரங்கள்.. புட்டு புட்டு வைத்த ராஜேஷ் கண்ணா.. என்னென்ன பண்ண வேண்டியதா இருக்கு!
Rajinikanth: நடிகர் ரஜனிகாந்த் தான் நடிக்கும் படங்களில் உள்ள பஞ்ச் வசனத்தை எப்படி பேசுவார் என்பதா நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் என்ற பெயரைக் கேட்டாலே தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருக்குள்ளும் ஒரு ஃபயர் வந்துவிடும்.
ரஜினிக்காகவே எழுதிய வசனங்கள்
அதற்கு காரணம், அவரது நடிப்பும் வேகமும், பேசும் வசனங்களும் தான். இந்திய சினிமாவின் மாஸ் நடிகரான அவருக்காகவே எழுதியது போன்ற சில வசனங்கள் படத்தில் இருக்கும். அவை காலம் சென்றாலும் இன்றும் மக்கள் மனங்களில் நிலைத்திருக்கிறது.
அப்படி அந்த வசனங்கள் எல்லாம் ஹிட் ஆக காரணம் வெறும் வசனங்கள் மட்டுமல்ல. அந்த வசனம் உச்சரிக்கும் விதம். அந்த ஸ்டைல், காட்சி அமைக்கப்பட்டிருக்கும் விதம் எல்லாமே சேர்ந்து தான் அதன் ஹைப்பை அதிகரிக்கும்.
படையப்பா பட மாஸ் டயலாக்
அப்படி ரஜினியின் மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய படத்தில் ஒன்று தான் படையப்பா. இதில், தன் நடிப்பால் அத்தனை நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டிருப்பார். அதற்கு சிவாஜி, ரம்யா கிருஷ்ணன் போன்றோரது கதாப்பாத்திரங்களும் உதவியிருக்கும்.
அப்படிப்பட்ட படையப்பா படத்தில் ரஜினிகாந்த் அதிகம் பயன்படுத்திய டயலாக் என்றால் 'என் வழி தனி வழி' என்பது தான். இந்த டயலாக்கை ஒரு முறையாவது சொல்லிப் பார்க்காத தமிழ் ரசிகர்களே கிடையாது. அப்படிப்பட்ட இந்த டயலாக்கை காப்பாற்ற ரஜினிகாந்த் செய்த சாதூர்யமான வேலையை நடிகரும் இயக்குநருமான ரமேஷ் கண்ணா ஆர்ஜே டொஷீலாவிடம் பகிர்ந்துள்ளார்.
வசனங்கள் லீக் ஆகும்
அந்தப் பேட்டியில், "படையப்பா படத்தில் வரும் முக்கியமான டயலாக் என்றால் அது என் வழி தனி வழி தான். அந்த காலத்தில் நாங்கள் படத்தில் வைக்கும் சில வசனங்கள் எல்லாம் எப்படியோ வெளியில் லீக் ஆகிவிடும்.
அதனால், இந்த டயலாக்கை எப்படியும் வெளியே லீக் ஆக விட்டுவிடக் கூடாது என்பதில் ரஜினி தீவிரமாக இருந்தார். அதனால், எங்களிடம் அவர் மிகவும் கராராக இருந்தார். இந்த வசனத்தை யாரும் வெளியே பேசவே கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
வாயை மட்டும் அசைத்த ரஜினி
அவர் இவ்வளவு வற்புறுத்தி கூறியதால் நாங்களும் இந்த டயலாக் பற்றி எதுவும் கூறவில்லை. அப்போது, இந்த படத்திற்கு சண்டை காட்சி இயக்குநராக இருந்தது கனல் கண்ணன் தான். படத்தின் சண்டை காட்சி எல்லாம் முடிந்ததும் ரஜினி இந்த டயலாக்கை சொல்ல வேண்டும்.
அப்போது, அவர் டயலாக்கை சத்தமாக சொல்லாமல் வாயை மட்டும் அசைத்தார். வசனத்தை இப்போது பேசினால் லீக் ஆகிவிடும். அதனால் நாம் இதை டப்பிங்கில் பேசி விடலாம் என்றும் கூறினார்.
ஆர்வமா வந்த கனல் கண்ணன்
இந்த ஐடியாவை நாங்களும் ஃபாலோ செய்தோம். அப்போது, சண்டை சீன் எல்லாம் முடிந்ததும் கனல் கண்ணன் என்னிடம் வந்து சண்ட முடிஞ்சதும் ரஜினி சார் ஒரு டயலாக் சொன்னாரே அது என்ன அப்டின்னு கேட்டான்.
நான் இத வெளிய சொல்ல கூடாதுங்குறதுனால எனக்கு தெரியாதேன்னு சொன்னேன். அப்படி நான் சொல்லியும் கனல் கண்ணன் நம்பல. திரும்ப திரும்ப கேட்டான்.
டயலாக் நல்லாவே இல்லையே
அப்போ அந்த ஷூட்டிங் எல்லாம் ஏரி பக்கத்துல தான் எடுத்தோம். திடீர்ன்னு நான் என் தண்ணி, தனி தண்ணின்னு சொன்னாருன்னு சொல்லிட்டேன்.
இதையும் உண்மைன்னு நம்புன கனல் கண்ணன், என் தண்ணி தனித் தண்ணியா இது என்ன டயலாக்கு, நல்லாவே இல்லையேன்னு சொல்லிட்டு போனான். அப்படி அந்த டயலாக் எல்லாத்தையும் மறைச்சு வச்சதுக்கு கிடைச்ச ரிசல்ட் தான் மாஸ் வரவேற்பு" என்றார்.
டாபிக்ஸ்