தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Ramarajan: கரகாட்டக்காரன் கட்ட பஞ்சாயத்து; சந்திரனை தூக்க வைத்த அரசியல்; கவுண்டமணிக்கு அடித்த ஜாக்பாட்!- ராமராஜன்

Actor Ramarajan: கரகாட்டக்காரன் கட்ட பஞ்சாயத்து; சந்திரனை தூக்க வைத்த அரசியல்; கவுண்டமணிக்கு அடித்த ஜாக்பாட்!- ராமராஜன்

Kalyani Pandiyan S HT Tamil
May 23, 2024 07:30 AM IST

Actor Ramarajan: அதனை மனதில் வைத்துக் கொண்டு, நான் படக் குழுவினரிடம் எஸ் எஸ் சந்திரன் அந்த கேரக்டரில் நடித்தால்,சரி வராது என்று சொன்னேன். ஆனால் படக்குழு அந்த கேரக்டரில் அவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தார்கள். - ராமராஜன்

Actor Ramarajan: கரகாட்டக்காரன் கட்ட பஞ்சாயத்து; சந்திரனை தூக்க வைத்த அரசியல்; கவுண்டமணிக்கு அடித்த ஜாக்பாட்!- ராமராஜன்
Actor Ramarajan: கரகாட்டக்காரன் கட்ட பஞ்சாயத்து; சந்திரனை தூக்க வைத்த அரசியல்; கவுண்டமணிக்கு அடித்த ஜாக்பாட்!- ராமராஜன்

ட்ரெண்டிங் செய்திகள்

ராமராஜன் பேட்டி: 

 

இது குறித்து அவர் பேசும் பொழுது, முதலில் கரகாட்டக்காரன் திரைப்படத்தில், தவில் அடிப்பவர் கேரக்டரில், படக்குழு நடிகர் எஸ் எஸ் சந்திரனைதான் நடிக்க வைப்பதாக முடிவு செய்து இருந்தார்கள். அந்த முடிவை அவர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள். ஆனால் அப்போது அரசியலில் அவர் வேறு கட்சி. நான் வேறு கட்சி என்றிருந்தோம். அவர், அவரது சில படங்களில் கட்சி சம்பந்தமான விஷயங்களை பேசுவார். 

அதனை மனதில் வைத்துக் கொண்டு, நான் படக் குழுவினரிடம் எஸ் எஸ் சந்திரன் அந்த கேரக்டரில் நடித்தால்,சரி வராது என்று சொன்னேன். ஆனால் படக்குழு அந்த கேரக்டரில் அவரைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் உறுதியாக இருந்தார்கள். நான் உடனே, எஸ் எஸ் சந்திரன் நடித்தால், வேறு மாதிரியான பிரச்சினைகள் உருவாகலாம். அதனால் அந்த கேரக்டரில் நீங்கள் கவுண்டமணி அண்ணனை போடுங்கள் என்று பரிந்துரைத்தேன்.

பிடிவாதத்தில் ராமராஜன்:

 

ஆனால், அவர்கள் கடைசி வரை என்னுடைய முடிவுக்கு ஒத்து வரவே இல்லை. இதனையடுத்து மனதில் உள்ளதை கங்கை அமரனிடம் சொன்னேன். அவரை அழைத்து, அண்ணே எஸ் எஸ் சந்திரன் படத்திற்குள் வந்தால், அவர் அரசியல் பேசுவார் கரகாட்டக்காரன் அரசியல் படம் இல்லை என்று கூறினேன். ஆனாலும், அவர் கடைசி வரை ஒத்து வரவில்லை. இதனையடுத்து நான் எஸ் எஸ் சந்திரன்தான் அந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்றால், நான் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். 

முந்தைய படங்களில் கருத்து மோதல்:

 

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முன்னதாக, அவருடன் நான் நடித்த படங்களில், எனக்கும் அவருக்கும் இடையே சில கருத்து மோதல்கள் நடந்து விட்டன. அதாவது, அவர் என்னையும் மீறி அரசியல் பேசுவார். உடனே நான் அவரிடம் கதாநாயகன் ஆன நானே, படத்தில் அரசியல் பேசவில்லை. காமெடியான நீங்கள் எப்படி பேசலாம் என்பேன். மோதல் வெடிக்கும். 

கவுண்டமணி அண்ணனிடம் நான் எதுவும் பேசவே இல்லை.

இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டமணி அண்ணனிடம் நான் எதுவும் பேசவே இல்லை. இப்போது வரை அவருக்கு தெரியாது. இந்த பேட்டியின் வழியாகத்தான் தெரியப்போகிறது. நான் தான் அந்த கதாபாத்திரங்களில் கவுண்டமணி, செந்தில் நடிக்கட்டும் என்று சொன்னேன் சொன்னபடியே, அவர்களது கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்