Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

Actor Ramarajan: ‘அடுத்த படத்தில் கண்டிப்பா டூயட் உண்டு; கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா?’ - ராமராஜன் பேட்டி

Kalyani Pandiyan S HT Tamil
May 17, 2024 10:25 AM IST

Actor Ramarajan: கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா என்பதற்கு நடிகர் ராமராஜன் பதிலளித்து இருக்கிறார். - ராமராஜன் பேட்டி உள்ளே!

Actor Ramarajan: ‘மாங்குயிலே பூங்குயிலே’… கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா? - ராமராஜன் பதில்!
Actor Ramarajan: ‘மாங்குயிலே பூங்குயிலே’… கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் வருமா? - ராமராஜன் பதில்!

கிட்டத்தட்ட 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார் இளையராஜா. இந்தப்படத்தை ஆர். ராகேஷ் இயக்கி இருக்கிறார்

இந்த படம் விரைவில் வர இருக்கிறது. இதை தொடர்ந்து நடிகர் ராமராஜன் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பல தகவல்களை வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:-

 “நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்க வில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை; அல்லது கேட்ட கதை எனக்கு பிடிக்கவில்லை.

அதோடு 2010 ம் ஆண்டு, நான் மீட்டிங் போய் விட்டு வரும்போது மிகப்பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு நான் உயிரோடு இருப்பேன் என்றோ, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றோ நினைத்து கூட பார்த்தது இல்லை. 

ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதை

இப்படி ஒரு படம் நடிப்பேனா என்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான்.. இந்த ரசிகர் மன்றங்களுக்கு, நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் எனக்காக உயிரை தரக்கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த சாமானியன் படத்தில் ஏன் நடித்தேன் என்றால் இயக்குநர் ராகேஷ் சொன்ன கதை தான் காரணம். இது வரை நான் நடிக்காத கதை. இதுவரை திரை உலகம் சந்தித்திராத கதை. படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும். 

படத்தில் குடும்பமும் இருக்கும். குதூகலமுமிருக்கும், நகைசுவையும் இருக்கும். நளினமும் இருக்கும். எல்லா அம்சமும் கூடிய கதை இது. இதனால் தான் இப்படத்தை தேர்ந்தெடுத்தேன். 

இந்தப்படத்தின் திரைக்கதையை, உலகில் பிறந்த எவரும் கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது. படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும் கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கு ஒரு கதையாக இது இருக்கும். 

இப்படத்தில் என் ரசிகர்களுக்கு சின்ன வருத்தம் வரும். அது என் திரையுலக புகழுக்கு காரணம் இளையராஜாவின் இசை தான். அவர் இல்லாமல் நான் இல்லை. இந்த 23 வருடங்களிலும், என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், இளையராஜாவின் பாட்டு தான் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்று பல இடங்களில் இளையராஜா, ராமராஜன் பாடல்களை தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

ஆனால் இப்படத்தின் கதை படி இப்படத்தில் எனக்கு ஜோடி இல்லை. அதோடு பாட்டும் இல்லை. அதனால் இசையமைப்பாளராக யாரை போடுவது என்பதில் பட ஆரம்பத்தில் சிறு குழப்பம் இருந்தது. பட்ஜெட்டும் இடித்தது. ஆனால் ராமராஜன் என்றால் இளையராஜா இருந்தால் தான் நன்றாக இருக்கும் என பலரும் சொல்லவே, ராஜாவிடம் சென்றோம்.

அவர் கதையை கேட்டதுமே, ‘‘ஏம்பா… ராமராஜனும் நானும் சேர்ந்தால் பாட்டுதானேப்பா…ஆனால் பாட்டு இல்லாம ஏங்கிட்ட வந்து இருக்கீங்களே..‘‘ என கேட்டார்.. கதை அப்பட்டிண்ணே என்றோம். பிறகு எனக்காக ஒரு பாட்டை படத்தில் சேர்த்தார். ஆனால் இளையராஜா இப்படத்துக்கு வந்த பிறகு, படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்.

இப்படத்தில் எனக்கு ஜோடி இல்லையே தவிர, இனி வரும் படங்களில் என் படங்களில் கண்டிப்பாக ஜோடி இருக்கும். டூயட் கூட பாடலாம் என இருக்கிறேன். கதை நல்லா இருந்தால், ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். என்னிடம் கூட இயக்குநர் கங்கை அமரன் வந்து ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? என கேட்டார். நான் மறுத்து விட்டேன். 

கரகாட்டக்காரனிலேயே எல்லா ஆட்டைத்தையும் ஆடியாச்சு. பாட்டையும் பாடியாச்சு. இனி என்ன ஆட்டம் ஆடுறது. அதனால் வேண்டாம் சார் என சொல்லி விட்டேன். கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் இல்லை” இவ்வாறு ராமராஜன் கூறினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.