RajKiran : ’ஜாக்கிரதையா இருங்க.. என்னிடம் யார் சிபாரிசும் எடுபடாது..’ நடிகர் ராஜ்கிரண் பகிர்ந்த பகீர் பதிவு!
நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றைபகிர்ந்துள்ளார். அதாவது தனது போட்டோவை காட்டி, ஒருவர் ஏமாற்ற முயல்வதாகவும் இதனால் ஜாக்கிரதையாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.

தன்னிடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் கவனமாக இருங்கள் என்று நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ”நான் ஒரு நடிகன் என்பதால், என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது,சாதாரணமாக நடக்கும் விசயம். இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு, என் சொந்தக்காரர்கள் என்றோ, எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு, யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.
என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது
"கனடா செல்வம்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, என்னை வைத்து படம் தயாரிப்பதெற்கென்று, ஒரு சிபாரிசு மூலம் என்னிடம் வந்து பேசி, என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்ற ஒரு நபர், அதன் பிறகு என்னை சந்திக்கவுமில்லை. படம் தயாரிக்கவும் இல்லை. இது நடந்து ஏழெட்டு வருடங்கள் ஆகிறது. அதே நபர் சமீபத்தில் தளபதி என்ற ஒரு தயாரிப்பாளர், இயக்குனரிடம், என்னுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக்காட்டி, தன் பெயரை “ஸ்டார்லின்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, ஏதோ ஒரு வகையில் அந்த தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.
cச்ச்ச்ச்ச். என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு, கதைகள் பல சொல்லி, யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு” என பதிவிட்டுள்ளார்.
பல வெற்றிப் படங்களைக் கொடுத்த ராஜ்கிரண்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களுள் ஒருவராக பார்க்கப்படுபவர் ராஜ்கிரண். ராமராஜன் நடித்த படங்களைத் தயாரித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் தனுஷின் அப்பாவான கஸ்தூரிராஜா இயக்கிய ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் அதில் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ராஜ்கிரண் 1993ம் வெளியான அரண்மனைகிளி படத்தை இயக்கி தன்னை இயக்குநராகவும் நிரூபித்தார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்