Cynthiya Lourde: 'ரஜினி சார் செல்பி எடுக்க சொன்னாரு.. விஜய் கூட நடிக்க ஆசை'- சிந்தியா
Cynthiya Lourde: ரஜினி சாரிடம் நான் போட்டோ எடுக்கலாம் எனக் கேட்டேன். ஆனால் அவர் என்னிடம் செல்ஃபி எடுக்கலாம் எனக் கூறினார் என தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்தே கூறியுள்ளார்.

Cynthiya Lourde:தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகள் உள்ள நடிகர் ஸ்ரீகாந்த். இவரது படங்கள், அதில் உள்ள பாடல்கள் எல்லாம் மெகாஹிட் அடித்தன. இந்நிலையில், இவர் சமீபத்தில் நடித்த படங்கள் எல்லாம் பெரிதாக மக்களை கவராமல் போனதால் அவர் தன் மார்க்கெட்டை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கினார்,
கிண்டலுக்குள்ளான ஸ்ரீகாந்த்
அந்த சமயத்தில் தான் அவர் தினசரி என்ற படத்தில் நடிப்பதாகவும், வெளிநாட்டு பெண் ஒருவர் அந்தப் படத்தை தயாரிப்பது மட்டுமல்லாமல் கதாநாயகியாகவும் நடிக்கிறார் என்றும் கூறி சில புகைப்படங்கள் வெளியாகின.
அந்த புகைப்படங்கள் வெளியான சமயத்தில் இருந்தே ஸ்ரீகாந்த் மீதும், நடிகை சிந்தியா லூர்தே மீதும் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்த ஸ்ரீகாந்த், யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
நீங்கள் யார்?
அதில், தன்னிடம் எந்த சோசியல் மீடியா அக்கவுண்டும் இல்லாததால் இதெல்லாம் என் காதுக்கு வருவதில்லை எனவும், அந்த பெண்ணிற்கு என்ன குறை, உருவ கேலி செய்வது மிகவும் தவறு. அவரிடம் நிறைய திறமைகள் இருக்கின்றன. அதை எல்லாம் தெரிந்துகொள்ளாமல் உருவ கேலி செய்வது வருத்தமாக உள்ளது. இவர்கள் தான் நடிக்க வேண்டும், இவர்கள் எல்லாம் நடிக்கக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது எனக் காட்டமாக பேசினார்.
விஜய்யோடு நடிக்க ஆசை
இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த தயாரிப்பாளரும் நடிகையுமான சிந்தியா லூர்தே ரஜினிகாந்த்துடன் எடுத்த போட்டோ குறித்து பேசி இருந்தார்,
எனக்கு ஹீரோவோட இடத்தையும் எனக்கே கொடுக்குற மாதிரியான படம் பண்ணனும். அந்த மாதிரியான கதையை ரெடி பண்ணனும்ன்னு ஆசை. இதையும் தாண்டி சொல்லனும்ன்னா எனக்கு சினிமாவ விட்டே போற ஒரு நடிகரோட நடிக்க ஆசை. எனக்கு அவரோட நடிக்கலைன்னாலும் வாய்ப்பு கிடைச்சா அவரோட படத்த தயாரிக்கனும்ன்னு ஆசை.
ரஜினி சார் செல்பி கேட்டாரு
நான் ரஜினி சார ஒரு மீட்டிங் சமயத்துல தான் பாத்தேன். அப்போ அவரோட ஒரு போட்டோ எடுத்துக்கலாமா என கேட்டேன். ஆனா அவரு என்கிட்ட செல்பி எடுக்கலாமான்னு கேட்டாரு. அவ்ளோ பெரிய ஆள் என்கிட்ட செல்பி கேட்டது என்னால மறக்கவே முடியாது. ஆனா நான் அவர ரொம்பவே மதிக்குறேன், அதனால அவரோட செல்பி எடுக்க விரும்பல. செல்பி எடுத்தா அவருக்கு ஒன்னும் பிரச்சன இல்ல. ஆனா அது எனக்கு பெரிய ட்ரோலா கூட வரலாம்.
பொறாமை தாங்கல
அப்போ தான் ராஜா சார் வந்தாரு. அவரோடவும் ரஜினி சாரோடவும் போட்டோ எடுத்தேன். அப்போ அந்த இடத்துல ரஜினி சாரும் ராஜா சாரும் எங்க நின்னு போட்டோ எடுக்கனும்ன்னு சண்டை போட்டுட்டு இருந்தாங்க. அப்புறம் தான் நாங்க போட்டோ எடுத்து ரிலிஸ் பண்ணேன். அதுவே இங்க பலபேருக்கு பொறாமை தாங்க முடியல.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்