தலைவர் தரிசனம்.. சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் ரஜினிகாந்த்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தலைவர் தரிசனம்.. சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் ரஜினிகாந்த்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்..

தலைவர் தரிசனம்.. சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் ரஜினிகாந்த்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 26, 2025 02:11 PM IST

நடிகர் ரஜினிகாந்த் கோவிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ, விமானத்தில் பயணிகளுடன் பயணித்த வீடியோக்களும் அவரை ஆராவாரம் செய்து ரசிகர்கள் ரசித்த வீடியோக்களும் இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது.

தலைவர் தரிசனம்.. சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் ரஜினிகாந்த்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்..
தலைவர் தரிசனம்.. சோசியல் மீடியா முழுவதும் வைரலாகும் ரஜினிகாந்த்.. ஆராவாரம் செய்யும் ரசிகர்கள்..

ரஜினி சாமி தரிசனம்

கோவை அருகே ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வந்த ரஜினிகாந்த், ஆணைக்கட்டி மலையில் உள்ள மாதேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதுதொடர்பான வீடியோ ரசிகர்களின் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் காரில் இருந்து இறங்கி கோயிலை நோக்கி செல்லும் வீடியோவை பலரும் எக்ஸ் தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

நெற்றியில் திலகம்

அந்த வீடியோவில், சாலையோரத்தில் கோயில் முன்பு ரஜினியின் கார் நின்றதும் அர்ச்சகர்கள் அவரை மகிழ்ச்சியுடன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது ரஜினிகாந்த் வெள்ளை நிற ஆடை அணிந்திருந்தார். அர்ச்சகர்கள் முன்னிலையில் தெய்வத்தை வழிபட்டார். அர்ச்சகர் ரஜினிக்கு நெற்றியில் திலகம் இட்டார். பின், அர்ச்சகர் ரஜினியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார்.

இந்த வீடியோவை வைப் செய்து ரஜினியின் எளிமையை பாராட்டிய ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி வீடியோ காத்திருந்தது. அதுதான் ரஜினிகாந்த், இண்டிகோ விமானத்தில் மக்களோடு மக்களாக எகானமி கிளாஸில் பயணித்த வீடியோ. இந்த வீடியோவை பார்த்த பலரும் ரஜினியை கண்ட உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

தலைவர் தரிசனம்

ரஜினிகாந்த் விமானத்தில் ஏறியதும் பயணிகள் எப்படி ரியாக்ட் செய்தார்கள் என்ற வீடியோ தான் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. எக்ஸ் தளத்தில் இதுகுறித்த வீடியோவை பதிவிட்ட ரசிகர், "சரியாக சொன்னீர்கள். நான் தலைவர் தரிசனம் பெற்றேன்!!!!!!!! (தலைவரின் தரிசனம்) அழுகை. நடுக்கம். இதயம் படபடத்தது." என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைவா கோஷம்

இந்த வீடியோவில், ரஜினிகாந்த் விமானத்தில் ஏறியதை உணர்ந்ததும், மக்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்து தங்கள் தொலைபேசிகளை எடுத்து பதிவு செய்வதை காணலாம். அவர்கள் ரஜினியை பார்த்து கையசைத்து, அவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் தலைவா என்று கத்துகிறார்கள். நடிகர் அனைவரையும் வரவேற்று, தனது பெயரைச் சொல்லி கத்தியவர்களை அங்கீகரிப்பதில் மகிழ்ச்சியடைந்தார்.

உண்மையான மகிழ்ச்சி

இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒருவர், "அவர் முகத்தில் உண்மையான மகிழ்ச்சி தெரிகிறது, என்ன ஒரு மனிதர்" என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், "இது காலங்காலமாக பேசப்படும் வீடியோ!" என்று எழுதியுள்ளார். சிலர் அவர் எகானமியில் பயணம் செய்வதை சுட்டிக்காட்டினர், மற்றவர்கள் 'அந்த சிரிப்பை' பற்றி குறிப்பிட்டனர்.

எகானமி வகுப்பில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் எகானமி வகுப்பில் பயணம் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கடப்பாவிலிருந்து விமானத்தில் வந்தபோது அவர் காணப்பட்டார். அவர் தனது முகத்தை மறைக்கக்கூட முயற்சிக்கவில்லை, மேலும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மகிழ்ச்சியில் இருந்ததாகத் தெரிந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்பு அவர் விமான ஊழியர்களுடன் உரையாடினார்.

ரஜினிகாந்த் படங்கள்

ரஜினிகாந்த் கடைசியாக 2024-ஆம் ஆண்டு வெளியான 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார். அதில் அவர் தனது தவறுகளை உணர்ந்து திருந்தும் ஒரு கடுமையான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அவர் இந்தப் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்திலும், நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.