Actor Rajinikanth: நெட்டிசன்களிடையே வைரலாகும் கூலி படம்.. அப்டேட் மேல் அப்டேட் தரும் ரசிகர்கள்..
Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகிவரும் கூலி படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

Actor Rajinikanth: வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, அமீர் கான், சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்தது.
கூலியில் பூஜா ஹெக்டே?
தற்போது கூலி படத்தின் படப்பிடிப்புகளை படக்குழு மும்மரமாக நடத்தி வரும் நிலையில், கூலி படத்தில் ஒரு குத்து பாட்டு இருப்பதாகவும், அந்தப் பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடி உள்ளதாகவும் தகவல்கள் சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. ஜெயிலர் படத்தில் தமன்னா நடனமாடிய காவாலா பாடல் ஹிட் அடித்தது போல் இந்தப் பாடலும் பயங்கர வைப் செய்து ரசிகர்களை குஷியாக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிடவில்லை.