22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!

22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!

Malavica Natarajan HT Tamil
Published Jun 17, 2025 10:07 AM IST

மஞ்சு விஷ்ணு நடித்துள்ள கண்ணப்பா திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், அவரை கட்டியணைத்து பாராட்டியுள்ள புகைப்படம் இப்போது ட்ரெண்ட் ஆகியுள்ளது.

22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!
22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!

22 வருட காத்திருப்பு

இந்த 'கண்ணப்பா' திரைப்படத்தை சமீபத்தில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மஞ்சு விஷ்ணு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினார். 22 வருடங்களாக காத்திருந்தேன் நேற்று இரவு ரஜினிகாந்த் எங்கள் 'கண்ணப்பா' திரைப்படத்தைப் பார்த்து தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாகவும், அவர் அந்த அணைப்புக்காக 22 வருடங்களாக காத்திருந்ததாகவும் மஞ்சு விஷ்ணு இன்று (ஜூன் 16) ட்வீட் செய்துள்ளார்.

ரஜினியின் டைட் ஹக்

ரஜினியை தானும், தனது தந்தை மோகன் பாபுவும் சந்தித்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 'கண்ணப்பா' திரைப்படம் ரஜினிகாந்திற்கு மிகவும் பிடித்திருந்ததாக விஷ்ணு குறிப்பிட்டுள்ளார். “நேற்று இரவு ரஜினிகாந்த் அங்கிள் 'கண்ணப்பா' திரைப்படம் பார்த்தார். படம் முடிந்ததும் எனக்கு டைட் ஹக் கொடுத்தார். அவருக்கு படம் பிடித்திருந்ததாக கூறினார். அந்த ஹக்கிற்காக ஒரு நடிகனாக 22 வருடங்களாக காத்திருந்தேன். இது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது.

சிவபெருமானின் லீலை

'கண்ணப்பா' ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது. சிவபெருமானின் லீலைகளை இந்த உலகம் உணர்வதைப் பார்க்க நான் காத்திருக்க முடியவில்லை” என்று மஞ்சு விஷ்ணு ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி- மோகன் பாபு

மோகன் பாபு மற்றும் ரஜினிகாந்த் பல தசாப்தங்களாக நல்ல நண்பர்களாக உள்ளனர். 'பெத்தராயுடு' படத்தில் ரஜினி மற்றும் மோகன் பாபு இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆனதுடன் ஐகானிக் ஆகவும் மாறியது.

ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்

'கண்ணப்பா' திரைப்படம் பான் இந்தியா ரேஞ்சில் வெளியாகவுள்ளது. தெலுங்குடன் சேர்த்து ஹிந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதனால் நாட்டின் பல இடங்களில் படக்குழுவினர் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக ஹிந்தி ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட் ராஜஸ்தானில் உள்ள நத்வாராவில் ஜூன் 17 அன்று நடைபெறவுள்ளது.

'ஸ்டாச்சு ஆஃப் பிலீஃப்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பிரம்மாண்டமான சிலை அருகே இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டை காளஹஸ்தியில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

கண்ணப்பா டீம்

'கண்ணப்பா' படத்தில் பான் இந்தியா ரெபல் ஸ்டார் பிரபாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால் ஆகியோரும் இந்த படத்தில் உள்ளனர்.

மஞ்சு மோகன் பாபு, சரத் குமார், மது, பிரம்மாஜி, கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஸ்டீபன் தேவாசி இசை அமைத்துள்ளார். மோகன் பாபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு சுமார் ரூ.150 கோடி பட்ஜெட் ஆனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.