Good Bad Ugly Movie Release: 'அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'- வாழ்த்திய ரஜினிகாந்த்
Good Bad Ugly Movie Release: குட் பேட் அக்லி ரிலீஸை முன்னிட்டு நடிகர் அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்' என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Good Bad Ugly Movie Release: நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது.
அஜித் குமாருக்கு வாழ்த்து
இந்நிலையில், தோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி காந்த்தும் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய நடிகர் ரஜினி காந்த், " நடிகர் அஜித் குமாரை கடவுள் ஆசிர்வதிக்கட்டும்" எனக் கூறியதுடன் குட் பேட் அக்லி படத்திற்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கூலி, ஜெயிலர் 2 அப்டேட்
முன்னதாக, சென்னை விமான நிலையம் வந்த ரஜினி காந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, கூலி படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக நடைபெற்று வருகிறது. படம் வரும் 14 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜெயிலர் 2 படத்திற்கான ஷூட்டிங்கிற்கு செல்கிறேன். இப்போ தான் படத்த ஆரம்பிச்சிருக்கோம். எப்போ முடியும் எனத் தெரியாது என்றார்.
குமரி ஆனந்தனுக்கு இரங்கல்
மேலும் பேசிய அவர், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார். குமரி ஆனந்தன் தூய்மையான இதயம் கொண்டவர் என்று கூறி அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்டார்.
கூலி படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ள நிலையில், படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளது. தமிழில் ஆக்ஷன் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன.
அத்துடன் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றர். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் கூலி படத்தின் ஓடிடி ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் 2
கடந்த 2023இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ஹிட்டானதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது. இதையடுத்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகமாக ஜெயிலர் 2 உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜெயிலர் 2 படம் குறித்து அதிகாரப்பூர்வமாக டீஸர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
