Coolie Movie Update: ரஜினியின் கூலி பட டிஜிட்டல் ரைட்ஸ் இத்தைனை கோடியா? வெளியான ஷாக் தகவல்..
Coolie Movie Update: நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி பட டிஜிட்ல் ரைட்ஸ் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக கவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

Coolie Movie Update: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் கூலி திரைப்படம் மீதான ஆர்வம் மக்களிடம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது. தொடர்ந்து வரும் படத்தின் அப்டேட்டுகளால் ரஜினி காந்த்தின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இந்த நிலையில், கூலி படம் குறித்த மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
பெரிய அளவில் ஒப்பந்தம்
தமிழில் ஆக்ஷன் படங்களை கொடுத்து வெற்றி பெற்று வரும் லோகேஷ் கனகராஜ் ரஜினியுடன் இணைந்து கூலி படத்தை இயக்குவதால் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளன. அத்துடன் இந்தப் படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் என பல மொழி திரைக் கலைஞர்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றர். இவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும் கூலி படத்தின் ஓடிடி ஒப்பந்தம் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஓடிடி ரைட்ஸ் விலை
கூலி திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் உரிமைகள் ரூ.120 கோடி என்ற மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மிகப்பெரிய அளவிலான ஆர்வம் இருப்பதால், இந்த கூலி படத்திற்கு அந்த அளவிற்கு விலை கொடுக்க பிரைம் வீடியோ முன்வந்துள்ளது.
தங்க கடத்தல் மாஃபியா
கூலி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியானது. இந்த படம் தங்க கடத்தல் மாஃபியா சுற்றி நகரும் என்பது அந்த டீசரில் இருந்தே தெளிவாகிறது. தங்கத்தை முன்னிலைப்படுத்தி இந்த டீசர் வெளியிடப்பட்டது. லோகேஷ் கனகராஜ் பாணியிலான ஆக்ஷன் படமாகவே இருக்கும். ஆனால், லோகேஷ் கனகராஜ் சினிமா யுனிவர்ஸ் (எல்.சி.யூ) இல் இந்த படம் இடம் பெறாது.
விறுவிறுப்பான படப்பிடிப்பு
கூலி படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனாவுடன் கன்னட ஸ்டார் உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், ரெப்பா மோனிகா ஜான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதனால் தமிழ் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களிடையே இந்த படத்தின் மீது நல்ல ஆர்வம் உள்ளது.
கூலி ரிலீஸ்
கூலி படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பேனரில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படம் இந்த ஆண்டிலேயே வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம்.
பூஜா ஹெக்டே சிறப்பு தோற்றம்
கூலி படத்தில் பாலிவுட் ஸ்டார் ஹீரோ ஆமிர் கான் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது இந்த நிலையில் தான் நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடலில் நடனம் ஆட உள்ளதாக படக்குழு அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
