'ஓ மை காட்' .. எப்போ நடந்தது?.. திருவண்ணாமலை நிலச்சரிவுக்கு ரஜினி வருத்தம்
திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு ரஜினிகாந்த் ஓ மை காட் என பதிலளித்து சென்றுள்ளார்.
வேட்டையன் படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் கூலி. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன், நடிகர்கள் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்த நிலையில், படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு
இந்நிலையில், கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, நடிகர் ரஜினிகாந்த்திற்கும் அமீர்கானுக்குமான காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஜெய்ப்பூர் செல்வதற்காக கிளம்பினார்.
திருவண்ணாமலை நிலச்சரிவு
ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் திருவண்ணாமலை நிலச்சரிவு குறித்தும் அதில் 7 பேர் சிக்கி உயிரிழந்தது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ரஜினிகாந்த், எப்போ நடந்தது எனக் கேள்வி கேட்டு விவரங்களை பெற்றார். பின் ஓ மை காட்.. ஸாரி என பதலளித்த ரஜினி அங்கிருந்து சென்றுவிட்டார்.
பிறந்தநாள் பரிசு
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த்துக்கு அவரது ரசிகர் விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை வழங்கி அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
முதற்கட்ட படப்பிடிப்பு
கடந்த ஜூலை மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.
ரஜினிக்கு சிகிச்சை
இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் நடந்த படபிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வு எடுத்த நிலையில் மீண்டும் ஷூட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் செல்கிறார்.
கூலி ரிலீஸ் எப்போது?
கூலி படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்