என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!

என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!

Malavica Natarajan HT Tamil
Nov 13, 2024 01:35 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்து வரும்நகூலி படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!
என்னது கூலி படம் ரிலீஸ் தேதி இதுதானா? முக்கிய புள்ளியின் பிறந்த நாளை குறிவைக்கும் ரஜினி படம்!

கூலியில் இணையும் அமீர்கான்

இந்த நிலையில், கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பிருந்தே நடிகர் அமீர்கான் கூலி படத்தில் நடிக்க உள்ளார் என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

அனிருத் இசை

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களின் பெயர்களை படக்குழு வெளியிட்டு வந்த நிலையில், படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி ரிலீஸ் எப்போது?

தற்போது கூலி படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் ரஜினி காந்த்தின் 171வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை விரைவில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதன்படி வரும் 2025ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி கூலி படத்தை ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இது நடிகர் அஜித் குமாரின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதற்கட்ட படப்பிடிப்பு

கடந்த ஜூலை மாதம் கூலி படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விசாகபட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.

ரஜினிக்கு சிகிச்சை

இதற்கிடையில், விசாகப்பட்டினத்தில் நடந்த படபிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்தசமயத்தில் கூலி படத்தில் நடிகர் அமீர்கான் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

கூலி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அதில் அமீர்கான் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீக்கான காட்சிகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ நாகார்ஜுனா சைமன் என்ற முக்கியத்துவமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த சமயத்தில், நாகார்ஜூனாவின் சண்டைக் காட்சியை காட்சியை ரசிகர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து ஆன்லைனில் லீக் செய்து படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

கூலியால் உடல்நல பாதிப்பா?

ரஜினி சார் தனக்கு இதுபோன்று சிகிச்சை இருக்கிறது என்பதை, கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு முன்பாகவே படக்குழுவிடம் தெரிவித்துவிட்டார். அதற்கு ஏற்றவாறுதான் நாங்கள் ஷூட்டிங்கை திட்டமிட்டு இருந்தோம்.

காரணம், இந்தப்படத்தில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களது தேதிகள் அனைத்தும் இங்கு மிக முக்கியமானது. கடந்த 28ஆம் தேதியே ரஜினி சார் தொடர்பான காட்சிகள் அனைத்தையுமே எடுத்து அவரை அனுப்பிவிட்டோம். 29ஆம் தேதி காலை அவர் சென்னை வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விட்டார்.

இது எங்களுக்கு முன்னதாகவே தெரியும். ஆனால் சோசியல் மீடியாவில் படப்பிடிப்பினால் தான் இவருக்கு உடல்நிலை மோசமானது என பரவிய செய்தியால் நாங்கள் அனைவரும் பயந்துவிட்டேன் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.