Actor Rahman: ஹிந்தியில் அமிதாப்பச்சன் பிள்ளையாக.. தமிழில் முதன்முறையாக பாவனா ஜோடியாக; பரபர பிஸியில் நடிகர் ரஹ்மான்!
கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’திரைப்படத்தில் மதுராந்தகத்தேவராக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது முதன்முறையாக நடிகை பாவனாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.
எஸ்.ஏ.சி இயக்கிய ‘நிலவே மலரே’ திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் ரஹ்மான். அதனைத்தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்த இவர் பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’திரைப்படத்தில் மதுராந்தகத்தேவராக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் தற்போது முதன்முறையாக நடிகை பாவனாவுடன் இணைந்து நடிக்க இருக்கிறாராம்.
பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் ஆரம்பமானது. புது முக இயக்குநர் ரியாஸ் மாரத் இயக்கும் ஆக்ஷன் த்ரில்லரான இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக ரஹ்மான் நடிக்கிறார்.
நீண்ட இடை வெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தை ஏ பி கே சினிமாஸ் (APK) சார்பாக ஆதித் பிரசன்ன குமார் பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார்.
இரண்டாம் கட்ட பட பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடை பெறுகிறது. “துருவங்கள் 16” ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்டத்தை தவிர, மலையாளத்தில் ரஹ்மான் கதாநாயகனாக நடிக்க, அமல் K ஜோப் இயக்கும் 'ஏதிரே ' , சார்ல்ஸ் இயக்கும் 'சமாரா' மற்றும் தமிழில் டைரக்டர் சுப்பு ராம் இயக்கும் 'அஞ்சாமை ' , கார்த்திக் நரேன் இயக்கத்தில் சரத்குமார், அதர்வாவுடன் இணைந்து நடிக்கும் ‘ நிறங்கள் மூன்று ’ என பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
இது தவிர ஹிந்தியில் ரஹ்மான் அறிமுகமாகும் பிரம்மாண்ட படம் ' கண்பத் ' . ' குயின் ' புகழ் விகாஸ் பால் இயக்கும் இப்படத்தில் ரஹ்மானும், டைகர் ஷெராஃபும் அமிதாப் பச்சனின் பிள்ளைகளாக நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. ரஹ்மான் கதா நாயகனாக நடிக்கும் முதல் வெப் சீரிசை டிஸ்னி ஹாட் ஸ்டாருக்காக பிரபல மலையாள நிறுவனமான ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிக்கிறது. நஜீம் கோயா இதனை இயக்குகிறார். '1000 பேபீஸ் ' என்று பெயர் சூட்ட பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு வரும் மே மாதம் 1- ம் தேதி கொச்சியில் துவங்கியது.