HBD Raghman : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்றவுடன் நினைவுக்கு வருபவர் இவர் தான்.. நடிகர் ரகுமான் பிறந்தநாள் இன்று!
நடிகர் ரகுமான் பிறந்தநாளான இன்று அவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரகுமான் 1967 ஆம் ஆண்டு மே 23-ல் அபுதாபியில் பிறந்தார். இவருடைய உண்மையான பெயர் ரசின் ரகுமான். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். 1983-ல் வெளிவந்த கூடுவிடே என்ற மலையாளப் படம் மூலம் அறிமுகம் ஆனார். ரகுமானின் முதல் தமிழ்த் திரைப்படம் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் 1986 இல் வெளிவந்த நிலவே மலரே. சஜன் தயாரித்த இப்படத்தில் பேபி ஷாலினி, நதியா மொயுடு, ரகுமான் மற்றும் மனோரமா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.
தொடர்ந்து கண்ணே கனியமுதே, வசந்த ராகம் மற்றும் சிவாஜி கணேசனுடன் அன்புள்ள அப்பா ஆகிய படங்களில் தோன்றினார். 1989ல் புது புது அர்த்தங்கள், புரியாத புதிர், நீ பாதி நான் பாதி ஆகிய படங்களில் நடித்தார். இவர் தெலுங்கு திரையுலகில் ரகு என்ற பெயருடன் அறியப்படுகிறார். தெலுங்கில் அவர் நடித்த பெரிய வெற்றிகளில் பாரத் பந்த் படமும் ஒன்று. ரஹ்மான் நடித்த முதல் தெலுங்குத் திரைப்படம் ராசலீலா. அது 1986 இல் வெளியிடப்பட்டது.
இவர் கடத்த 1993 ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி மெஹ்ருன்னிஸா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.