Actor Prithviraj : ‘பப்லுவை நான் திருமணம் செய்தேனா? எங்கள் பிரைவசிக்கு மதிப்பு கொடுங்க’ – ஷீத்தல் செஞ்சல்!
Actor Prithviraj : பிரித்வி ராஜ் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் ரன்பீர் கபூர், சந்திப் ரெட்டி வாங்காவின் காம்போவில் உருவாகியிருந்த வெற்றிப்படம்.
சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் பப்லு. இவர் சினிமா, சீரியல், ரியாலிட்டி ஷோ என்று பல்வேறு திரைகளிலும் கலக்கி வருபவர். அனைத்து கதாபாத்திரங்களிலும் திறமையாக நடிக்கக்கூடியவர் என்பதுதான் இவரது அடையாளம். வில்லன், சப்போர்டிங் ஆக்டர் என தன நடிப்பு துறையில் இவர் பல்வேறு அவதாரங்களால் தனது ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் தனது முதல் மனைவியை பிரிந்தார். ஷீத்தல் என்பவருடன் சேர்ந்து வாழ துவங்கினார். அப்போது கடும் விமர்சனத்துக்கு ஆளானார். ஷீத்தலுக்கு இவரின் மகள் வயது இருக்கும் என்பதால், இருவரின் உறவு கடும் வாக்குவாதங்களை ஊடகத்தில் கிளப்பியது. அனைத்தும் இவர் விளக்கம் கொடுத்து வந்தார்.
இந்நிலையில் இவர்கள் பிரிந்துவிட்டார்கள். இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அதுகுறித்தும் அவர் விளக்கம் கொடுத்திருந்தார். இவருடன் உறவில் இருந்த இவரது முன்னாள் காதலி இவர்களின் உறவு மற்றும் உறவு குறித்து தெரிவித்துள்ளார்.
முதலில் இவர்கள் இருவருக்கும் 33 வயது வித்யாசம் இருந்தது. இதனால் இவர்களின் காதல் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்கள் சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக சேர்ந்து கலந்துகொண்டதால், இவர்களின் உறவு உறுதிசெய்யப்பட்டது. 57 வயதான நடிகர் பிரித்விராஜ் 24 வயதான ஷீத்தலை திருமணம் செய்துகொண்டார் என்று கூறப்பட்டது.
இதனால் அனைவரும் இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது என்றுதான் எண்ணினார்கள். ஆனால் ஷீத்தல் அவர்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்று கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார். அவர்களுக்கு திருமணம் ஆகவில்லை என்ற தகவல் வெளியாகி பரபரப்பானது.
தனது முதல் மனைவி பீனாவை பிரிந்தது. அவரின் மகனுக்கு அவர் செய்துவைத்துள்ளது மற்றும் ஷீத்தலை சந்தித்தது. அவருடன் காதலில் விழுந்தது என்று அனைத்தையுமே பிரித்வி வெளிப்படையாகத்தான் கூறியிருந்தார். ஷீத்தலின் பெற்றோரும், அவர்களின் உறவுக்கு அங்கீகாரம் அளித்தனர். அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்தனர்.
2022ம் ஆண்டில் ஷீத்தலை திருமணம் செய்துகொண்டதாக பிரித்வி அறிவித்தார், அவர்களின் உறவு 2023ம் ஆண்டு வரை தொடர்ந்தது. ஆனால் ஷீத்தல் தனது அண்மை நேர்க்காணலில், தனது உறவு, திருமணம் மற்றும் பிரிவு என அனைத்து குறித்தும் வெளிப்படையாக பேசினார். பப்லு பிரித்விராஜ் உடனான தனது உறவு குறித்து அவர் வாய் திறந்தார்.
அவர் தெலுங்கு ஏசியா நெட் சேனலிடம் பேசியபோது, அவருக்கும் பிரித்வி ராஜ்க்கும் திருமணம் நடக்கவில்லையென்றும், அவர்கள் சேர்ந்து வாழ்ந்ததாக தெரிவித்தார். சில காரணங்களால், தாங்கள் எண்ணியதுபோல் தங்களின் உறவு வளரவில்லை என்றும், அதனால் நாங்கள் பிரிந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
எனவே மக்கள் எங்களுக்கு சிறிது காலமும், எங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மதித்தும் நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார். தாங்கள் சில மாதங்களுக்கு முன் பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
பிரித்வி ராஜ் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படம் ரன்பீர் கபூர், சந்திப் ரெட்டி வாங்காவின் காம்போவில் உருவாகியிருந்த வெற்றிப்படம்.
பீனாவுடன் முதல் திருமணத்தில் இவருக்கு ஒரு சிறப்புக்குழந்தை ஒன்றும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பிரித்விராஜ்-பீனாவின் திருமணம் முறிவில் முடிவடைந்தது. அவர் சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சியில் ஷீத்தலை சந்தித்து, பின் காதலில் விழுந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்