தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Premji Marriage: மூன்று முடிச்சு போட்டாச்சு.. திருத்தணியில் மிங்கிலான முரட்டு சிங்கிள் பிரேம்ஜி!

Premji Marriage: மூன்று முடிச்சு போட்டாச்சு.. திருத்தணியில் மிங்கிலான முரட்டு சிங்கிள் பிரேம்ஜி!

Aarthi Balaji HT Tamil
Jun 09, 2024 10:43 AM IST

Premji Marriage: நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

திருத்தணியில் மிங்கிலான முரட்டு சிங்கிள் பிரேம்ஜி!
திருத்தணியில் மிங்கிலான முரட்டு சிங்கிள் பிரேம்ஜி!

ட்ரெண்டிங் செய்திகள்

களைகட்டிய திருமணம்

பிரேம்ஜியின் மனைவியின் பெயர் இந்து என்று வெங்கட் பிரபு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.

நீண்ட நாட்களாக சிங்களாக இருந்த பிரேம்ஜி இப்போது திருமண வாழ்க்கையில் இணைந்து இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் பிரேம்ஜிக்கும், இந்துவிற்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

சினிமாவில் நுழைந்தது எப்படி?

பிரபல இயக்குநரும், இசைக்கலைஞருமான கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி. இசையமைப்பதில் முதன்மையான ஆர்வம் கொண்ட இவர், திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவரது உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம், உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பின்னணிப் பாடகராக மாறினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பெரும்பான்மையான ராப் பாடல்களில் பிரேம்ஜி பாடியிருக்கிறார். அதே போல அவர் இசையமைப்பில் சிலவற்றை ஒலிப்பதிவு ஆல்பங்களுக்காக ரீமிக்ஸூம் செய்திருக்கிறார்.

2006 ஆம் ஆண்டில், சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக நடித்து நடிகராக அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவர் தனது சகோதரர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 ( 2007 ) இல் சீனுவாக நடித்தார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய கோடைகால வெற்றி படமாக மாறியது. பிரேம்ஜியையும் நகைச்சுவை நடிகராக நிலை நிறுத்தியது.

வெங்கட்டின் அடுத்த படமான சரோஜாவிலும் தனது சகோதரருடன் இணைந்தார் பிரேம் ஜி. தொடர்ந்து, கோவா, மங்காத்தா, சேட்டை (2013) உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதனைதொடர்ந்து, திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரேம்ஜி, நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராகவே இருந்து வந்தார். அவருக்கு திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை அண்மையில் உறுதிபடுத்திய அவரது சகோதரர் வெங்கட் பிரபு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். ஆனால் பெண் தொடர்பான எந்த ஒரு குறிப்பும் கொடுக்கவில்லை.

பிரேம்ஜி படங்கள்

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் பிரேம்ஜி, கோட் படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக சத்திய சோதனை படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு மற்றும் அஷோக் செல்வன் கூட்டனியில் வெளியான மன்மத லீலை படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி இருந்தார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்