Actor Prashanth: நானும் அவரும் சேர்ந்து நடிக்கிறோம்; சர்ச்சையான பேச்சு!- ‘விஜய பத்தி நான் அப்படி சொல்ல வரல’- பிரசாந்த்!
Actor Prashanth: கோட் ஒரு மல்டி ஸ்டார் படம். அந்தப்படத்துல விஜய், நான் உள்ளிட்ட பல பேர் சேர்ந்து நடிக்கிறோம். - பிரசாந்த் பேட்டி!
HT Exclusive: நன்றாக படித்து டாக்டராக மாற வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த பிரசாந்திடம் இயல்பாகவே இருந்த தகுதிகள், அவரை ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்திற்கு வலுக்கட்டாயமாக நடிக்க வைத்தது. அந்தப்படத்தின் வெற்றி அவரை தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என நாலாபுறங்களிலும் கொண்டு செல்ல, அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான ‘செம்பருத்தி’ திரைப்படம், அவருக்கு வேறு மாதிரியான திருப்புமுனையைக்கொடுத்தது.
தொடர்ந்து, அடுத்தடுத்தடுத்த படங்கள் ஹிட்டாக, அதன் பின்னர் பிரசாந்த் தொட்டது டாப் ஸ்டார் எனும் பட்டம். தற்போது அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அந்தகன் என்ற படத்தின் மூலம், ஆகஸ்ட் 9 அன்று திரைக்கு வருகிறார் அவருடன் உரையாடினேன்.
விஜயைப்பற்றியது பேசியது சர்ச்சையாச்சே?
அப்போது பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில், அவரிடம் கோட் படத்தில் விஜய் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களே என்று கேட்ட போது, நானும் அவரும் சேர்ந்துதான் நடிக்கிறோம் என்று சொன்னார். திடீரென்று அவர் அப்படி பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, “ சார்.. கோட் ஒரு மல்டி ஸ்டார் படம். அந்தப்படத்துல விஜய், நான் உள்ளிட்ட பல பேர் சேர்ந்து நடிக்கிறோம்.
வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார். தேவையில்லாத விஷயங்களையெல்லாம் நாம நம்ம தலை மேல போட்டுக்கக்கூடாது.
அதைத்தான் நான் அங்கே சொன்னேன். வேறு எதையையும் நான் அங்க சொல்ல வரல. என்னைப்பொருத்தவரை அது ஒரு சர்ச்சையே கிடையாது. வாழ்க்கை ரொம்ப சிம்பிள் சார். தேவையில்லாத விஷயங்களையெல்லாம் நாம நம்ம தலை மேல போட்டுக்கக்கூடாது. என்னோட வெற்றியிலும் சரி, தோல்வியிலும் சரி என்னோட அப்பா, அம்மா மற்றும் ரசிகர்களோட அன்பு எனக்கு எப்போதும் உறுதுணையா இருக்கு.. அப்புறம் என்ன நமக்கு..” என்று பேசினார்.
முன்னதாக, மணிரத்னம், ஷங்கர் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய நடிகர் பிரசாந்த் மணிரத்னம் பற்றி பேசும் போது, “திருடா, திருடா படத்துல மணி சார் கூட வொர்க் பண்ணக்கூடிய வாய்ப்பு கிடைச்சிச்சு. சார் ரொம்ப ரொம்ப சைலண்ட். அதிகமா பேச மாட்டார். பத்து வார்த்தை பேசுற இடத்துல, இரண்டு வார்த்தை பேசிட்டு போயிடுவார்.
அவர் ஒரு மாதிரி ஸ்டைலா சீனை சொல்லிக்கொடுப்பார். அவர்கிட்ட இருக்குற இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்ன அப்படின்னா, அந்த சீனை நம்மளால பண்ண முடியும் அப்படிங்கிற நம்பிக்கைய, நமக்குள்ளயே விதைச்சிடுவார். அதனால நமக்கே அவர் அந்த சீனை அவர் எப்படி எடுக்கப்போறார் அப்படிங்கிற ஆர்வம் வந்துரும். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப ஜாலியான அனுபவம்
எல்லாமே பிரமாண்டம்தான்
ஷங்கர் சாரை பொருத்தவரை, எல்லாமே பிரமாண்டமா இருக்கும். அவர் ஒரு சூப்பரான திங்கர். அவர்கிட்ட கற்பனை வளம் சும்மா அப்படி இருக்கும். எல்லாராலும், எப்படி வேணாலும் யோசிக்க முடியும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்