Andhagan Trailer: சீரியல் கில்லரா நான்? இந்தியன் 2 ரோஸ்டுக்கு மத்தியில் வந்த அந்தகன் டிரெய்லர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Andhagan Trailer: சீரியல் கில்லரா நான்? இந்தியன் 2 ரோஸ்டுக்கு மத்தியில் வந்த அந்தகன் டிரெய்லர்

Andhagan Trailer: சீரியல் கில்லரா நான்? இந்தியன் 2 ரோஸ்டுக்கு மத்தியில் வந்த அந்தகன் டிரெய்லர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jul 13, 2024 04:30 PM IST

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திடாத இந்தியன் 2 படத்தின் ரோஸ்டுக்கு மத்தியில் அந்தகன் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.

இந்தியன் 2 ரோஸ்டுக்கு மத்தியில் வந்த அந்தகன் டிரெய்லர்
இந்தியன் 2 ரோஸ்டுக்கு மத்தியில் வந்த அந்தகன் டிரெய்லர்

இதைத்தொடர்ந்து தற்போது அந்தகன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேதி குறிப்பிடாமல் ஆகஸ்ட் வெளியீடு என குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலிவுட் பட ரீமேக்

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடித்து வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் அந்தகன்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக்க கேரக்டரில் நடித்துள்ளார்.

வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.

க்ரைம் த்ரில்லருக்கு ஏற்றார் போல் படத்தின் ட்ரெய்லரும் விறுவிறுப்பான காட்சிகளுடன் அமைந்துள்ளது.

கொரோனோவால் தாமதம்

அந்தாதூன் பட ரீமேக் உரிமையை பெற்றிருந்த நடிகர் பிரசாந்த் தந்தையும், நடிகருமான தியாகராஜன் தமிழ் ரீமேக் குறித்து 2020இல் அறிவித்தார்.

முதலில் இந்த படத்தை மோகன் ராஜா இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் வேறொரு படத்தில் கமிட்டானதால் வெளியேறி ஜே.ஜே. பிரட்ரிக் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது. அவரும் சில காரணங்களால் வெளியேற தியாகராஜனே படத்தை இயக்கினார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வசனம் பணிகளை மேற்கொண்டார்.

2021இல் கோவிட் இரண்டாம் அலை காரணமாக படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதன் பின்னர் 2022இல் மீண்டும் தொடங்கி முடிவடைந்தது. ஒரே ஒரு பாடல் மட்டும் மீதமிருந்த நிலையில் அதுவும் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்டது.

வி கிரியேஷன்ஸ் வெளியீடு

கடந்த ஆண்டில் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை கலைப்புலி தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. பல முறை ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்ட தள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் படம் குறித்து எந்த புரொமோஷனும், அப்டேட்டும் வெளியிடப்படவில்லை. தற்போது சர்ப்ரைஸாக படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு ஆகஸ்டில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாக அந்தகன் படமும் இருந்து வருந்தது. இதற்கிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதுடன், ரசிகர்களால் ரோஸ்ட் செய்யப்பட்ட வரும் நிலையில் தற்போது அந்தகன் டிரெய்லர் பற்றியும் பேச்சுக்கள் எழ தொடங்கியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.