Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான்.. 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான்.. 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!

Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான்.. 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!

Marimuthu M HT Tamil
Jan 17, 2025 09:46 PM IST

Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான். 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!

Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான். 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!
Prakash Raj: சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான். 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன்.. ஓபனாக பேசிய பிரகாஷ் ராஜ்!

தெலுங்கு நடிகர் சித்து ஜொன்னலகட்டா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா, பிரகாஷ் ராஜ், அர்விந்த் சாமி, விஜய்சேதுபதி, மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் ஆகிய ஆறு நடிகர்களை அழைத்து கலாட்டா பிளஸ் யூட்யூப் சேனலில், பான் இந்தியா நடிகர்களுக்கான ரவுண்ட் டேபிள் பேட்டியை எடுத்துள்ளனர். அதில் பேசப்பட்ட முக்கிய உரையாடல்களின் தொகுப்பினைக் காணலாம்.

நிறைய நடிகர்கள் நான் நடிகர் ஆன பின் தனது பிரைவைசியை இழந்துவிட்டதாக புலம்புகின்றனர். அது குறித்து?

அர்விந்த் சுவாமி: நான் என்னுடைய சின்ன வயதிலேயே திடீர்னு சினிமாவுக்கு வந்திட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் பிரைவைசி பாதிக்கப்பட்டிருச்சு. நாம் வளரும்போது அதற்கு இதை இழக்கணும்னு புரிஞ்சுகிட்டேன். இது ஒருத்தரைப் பொறுத்து ஒருத்தருக்கு மாறுபடும்.

உன்னி முகுந்தன்: சினிமாவில் வருவதற்காக நிறைய உழைச்சிருக்கோம். சில நேரங்களில் நானும் ஸ்டார் என்று உணர்ந்து இருக்கேன். மற்றவர்கள் முன் பாராட்டுபெறும்போது சந்தோஷமாக தான் உணர்கிறேன். அதை கஷ்டமாக எடுக்கவில்லை.

பிரகாஷ் ராஜ்: நான் ரொம்ப தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு மனுஷன். எனக்கு தோசை சாப்பிடணும் என்றால், ஹோட்டலுக்குப் போவேன். நம்மைப் பார்க்கும் மனிதர்கள் இடத்தில் ஹாய் சொல்வேன். அவங்களுக்கும் அவங்க வேலை பார்க்க நேரமில்லை. ஏதாவது தவறாக ரசிகர்கள் செய்தார்கள் என்றால் செல்லம் வேண்டாம் என்று சொல்லிடுவேன்.

நான் எதையும் இழக்கல: விஜய் சேதுபதி!

விஜய்சேதுபதி: எனக்கு இந்த இடத்துக்கு கஷ்டப்பட்டு வந்து இருக்கேன். பிடிச்சு வந்திருக்கேன். எனக்கு இந்த லைஃப் பிடிச்சிருக்கு. ஸ்டாராக இருக்கப் பிடிச்சிருக்கு. மக்கள் என்னைக் கவனிக்கிறது பிடிச்சிருக்கு. அதே சமயம் கூட்டத்தில் போறதும் பிடிக்கும். நான் எதையும் இழக்கலைன்னு சொல்றேன்.

விஜய் வர்மா: நானும் நடிச்சிருக்கேன். நிறைய தடவை நான் தெருவில் நடந்து போயிருக்கேன். என்னை யாரும் அடையாளம் கண்டுபிடிக்கலைன்னு நினைச்சிருக்கேன். இப்போது என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுகொள்ளும்போது நான் சந்தோஷப்படுகிறேன். மக்கள் ஸ்பெஷலாக ஃபீல் பண்றதை நான் விரும்புறேன்.

அரவிந்த் சுவாமி: நான் நடிகர் என்பதற்காக எனக்கு ஏர்போர்ட்டில் சலுகைகள் கொடுத்தால் நான் அதை விரும்பமாட்டேன்.

சித்து ஜொன்னலகட்டா: நான் அதை சந்தோஷப்பட்டுதான் ஏத்துக்கிட்டேன். பிறகு எதற்கு வருத்தப்படப்போறேன். நமக்கு ஆடம்பரமான வாழ்க்கையைக் கொடுத்திருக்காங்க.

பிரகாஷ் கடந்தாண்டு குண்டூர் காரம், சத்தியபாமா, புருஷோத்தமடு, ராயன், உற்சவம், தேவரா, பகீரா ஆகியப் படங்களில் நீங்க நடிச்சிருக்கீங்க? எல்லாத்தையும் எப்படி மேனேஜ் பண்றீங்க?

பிரகாஷ் ராஜ்: எல்லா வேலைக்கும் கண்டிப்பாக கொஞ்சம் ஹோம் வொர்க் செய்யணும். நான் பண்றது எங்கேயும் தெரியாது. அதுதொடர்ச்சியான பயிற்சிமூலம் வருவது. சினிமா என்பது வாழ்க்கையில் 5% தான். 95% நான் வேறு ஒன்றுதான் செய்றேன். நான் சினிமா தான் என் வேலைன்னு ஒருபோதும் நினைக்கவில்லை.

கதை என்னவென்று பார்ப்பீர்களா?

அது எனக்கு ஒரு வேலை என்று வரும்போது, கண்டிப்பாகப் பார்ப்பேன். நிறைய இயக்குநர்கள், நிறைய மொழிகளில் வேலை செய்யும்போது, அதற்கு நான் பொருந்திப்போயிட்டேன்.

நல்ல கதை ஒரு வருஷத்துக்கு எத்தனை முறை வரும்?

வருடத்திற்கு ஒரு முறை தான் வரும். சில நேரம் இரண்டு முறை வரலாம். வெற்றிமாறனுடைய 40 நிமிஷ பாவக்கதைகளில் நடித்தேன். திடீர்னு திருச்சிற்றம்பலம் பட வாய்ப்பு வருகிறது. பகீரா பட வாய்ப்பு வருகிறது’’ என்று பேசினார், பிரகாஷ் ராஜ்.

நன்றி: கலாட்டா பிளஸ்

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.