விடுதலை 2 ஆம் பாகத்தில் இருந்து பாதியில் போன பிரகாஷ் ராஜ்! என்ன காரணம் தெரியுமா?
தோழர் கேகே கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்து இருந்தார். இதில் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பொருந்தி இருந்த கிஷோரின் நடிப்பால் தோழர் கேகேவாகவே அதில் வாழ்ந்தார். இருப்பினும் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ் தானாம்.
![விடுதலை 2 பாகத்தில் இருந்து பாதியில் போன பிரகாஷ் ராஜ்! என்ன காரணம் தெரியுமா? விடுதலை 2 பாகத்தில் இருந்து பாதியில் போன பிரகாஷ் ராஜ்! என்ன காரணம் தெரியுமா?](https://images.hindustantimes.com/tamil/img/2024/12/23/550x309/viduthalai2_1734947664808_1734947671148.png)
ஒரு படத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது என்றால் அந்த கதாபாத்திரத்தை வேறு யார் செய்தாலும், சிறப்பாக செய்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது. ஒரு சில படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகிய பின்னர் ஒரு சில சீன்களில் நடித்த பின்னரும் கூட அந்த படங்களில் இருந்து வெளியேறி உள்ளனர். அது குறித்த தகவல்கள் வெளியாகும் போது ரசிகர்கள் மிகவும் ஆச்சர்யப்படுவதுண்டு. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள விடுதலை இரண்டாம் பாகம் படமும் இணைந்துள்ளது.
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, சூரி, கிஷோர், சேத்தன், மஞ்சு வாரியார், பவானி ஸ்ரீ ஆகியோர் உட்பட பலர் நடித்துள்ள வெளியான படம் விடுதலை 2, கடந்த ஆண்டு இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் மக்கள் அரசியல் படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கான உரிமையை அவர்களே கேட்டு பெற வேண்டும் என்பதே இந்த படங்களின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.
இடது சாரி கொள்கை பேசிய விடுதலை
விடுதலை படத்தின் முதல் பாகத்தில் காவல்துறையினிடம் சிக்கிக் கொள்ளும் அப்பாவி கிராம மக்கள் எவ்வாறு துன்புறுகின்றனர் என்பதை பிரதிபலிக்கும் கதைக்களமாக இருந்தது. ஆனால் விடுதலை இரண்டாம் பாகம் படம் முழுவதும் அரசியல் கொள்கைகளாலும் கம்யூனிச சித்தாந்தத்தாலும் மக்கள் எவ்வாறு ஆதிக்கத்திற்கு எதிராகவும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும் போராட வேண்டும் என்ன கற்றுக் கொடுத்துள்ளது. படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்தே இடதுசாரி கொள்கையை ஆழமாக பேசியது. மேலும் ஜாதிய ஆதிக்கத்தின் பின்னணியில் மழுங்கிப் போய் கிடைக்கும் மக்களை விடுதலை உணர்வோடு போராட இப்படம் தூண்டி உள்ளது என கூறலாம்.
அந்த அளவிற்கு அரசியல் சித்தாந்த தெளிவு இல்லாத அனைவருக்கும் கம்யூனிச கொள்கையையும் இடதுசாரி கொள்கையையும் தெளிவாக இந்த படம் எடுத்துரைத்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறனின் திரை பயணத்தில் இதுவரை எடுத்த அனைத்து படங்களும் சமூகத்தில் கருத்தியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். விடுதலை 2 படமும் கருத்தில் ரீதான தாக்கத்தை மக்கள் மனதில் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.
தோழர் கேகே வாக பிரகாஷ் ராஜ்
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஏற்று நடித்த கதாபாத்திரம் மிகவும் வலிமை மிக்க கதாபாத்திரமாக இருந்தது. இத்தகைய வலிமையான பெருமாள் வாத்தியருக்கே ஒரு கருத்து முன்னோடியாகவும், ஒரு தலைவராகவும் இருந்தவர் தான் தோழர் கேகே, இந்த கதாபாத்திரத்தில் நடிகர் கிஷோர் நடித்து இருந்தார். இதில் மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் பொருந்தி இருந்த கிஷோரின் நடிப்பால் தோழர் கேகேவாகவே அதில் வாழ்ந்தார்.
இருப்பினும் இந்த கதாபாத்திரத்திற்காக முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் பிரகாஷ் ராஜ் தானாம். இவர் இப்படத்தில் ஒரு சில நாட்கள் நடிக்கவும் செய்துள்ளார். ஆனால் வேறு படத்தின் கால்ஷீட் இருந்த காரணத்தால் படத்தின் பாதியிலேயே விலகி விட்டார். இவர் இயக்குனர் வெற்றி மாறனுடன் உரையாடுவாதி போன்ற போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
டாபிக்ஸ்