Pradeep Ranganathan: 'தல வந்தா தள்ளிப் போய் தான ஆகணும்' பிரதீப் ரங்கநாதன் சொன்ன அப்டேட்
Pradeep Ranganathan: தனது டிராகன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை தனக்கே உரித்தான பாணியில் கூறியுள்ளார் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன்.

Pradeep Ranganathan: சின்ன சின்ன ஷார்ட் பிலிம் மூலம் கவனம் பெற்று பின் கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அடியெடித்து வைத்தவர் பிரதீப் ரங்கநாதன். இதைத்தொடர்ந்து லவ் டுடே படத்தில் இயக்குநரராக மட்டும் அல்லாமல் தன்னை கதாநாயகனாகவும் அடையாளப்படுத்தி இருப்பார்.
அடுத்தடுத்த படங்களில் பிரதீப்
இவரது வித்தியாசமான உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மக்கள் மனதில் பட்டென ஒட்டிக் கொள்ள இவரை கதாநாயகனாக வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்க இயக்குநர்கள் முன்வந்தனர்.
அதன் அடிப்படையில், பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்திலும் நடித்து ரிலீஸிற்காக காத்திருக்கிறார்.
தள்ளிப்போன டிராகன் ரிலீஸ்
இந்நிலையில், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், தற்போது, நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் டிராகன் படக்குழு அதன் ரிலீஸ் தேதியை மாற்றி அறிவித்துள்ளது.
அதன்படி, ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வைரலாகும் பிரதீப் பதிவு
அதே சமயத்தில் படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் இதுகுறித்து ரசிகர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தல வந்தா தள்ளிப் போய் தான ஆகணும் என சிரித்த முகத்துடன் குறிப்பிட்டு டிராகன் படம் வரும் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என கூறியுள்ளார்.
டிராகன் படக்குழு
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் இருந்து ரைஸ் ஆஃப் டிராகன், வழித்துணையே என 2 பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
விடாமுயற்சி ரிலீஸ்
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்படுவதாக படக்குழு டிரைலர் ரிலீஸில் அறிவித்துள்ளது. இதையடுத்து, பல திரைப்படங்கள் அதன் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து வருகின்றன. மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷியில் ரசிகர்கள்
அஜித் குமாரின் விடாமுயற்சி படம் படப்பிடிப்பின் போதே பல்வேறு காரணங்களால் தள்ளித் தள்ளி போனது. இதன் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப் போனதற்கு பல்வேறு கராணங்களும் கூறப்பட்டு வந்தது. இவற்றிற்கு எல்லாம் படக்குழுவிடமிருந்து எந்த விளக்கமும் இல்லாத நிலையில், 2025 பொங்கல் ரேலீஸ் களமிறங்கியது விடாமுயற்சி. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர்.
ஆனால், அதை குழைக்கும் வகையில், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புத்தாண்டு வாழ்த்து சொல்லி தெரிவித்தது. இதனால் மூட் அவுட்டில் இருந்த ரசிகர்கள் விடாமுயற்சி ரிலீஸிற்கு காத்திருந்த நிலையில், டிரெயிலர் வெளியிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்தது படக்குழு.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்