Atharvaa: டபுள் சைடு லவ்வைவிட ஒன் சைடு லவ்வில் எதையும் மறக்கமுடியாது- இதயம் முரளி டைட்டில் ரிலீஸ் விழாவில் அதர்வா பேச்சு
Atharvaa: டபுள் சைடு லவ்வைவிட ஒன் சைடு லவ்வில் எதையும் மறக்கமுடியாது என இதயம் முரளி டைட்டில் ரிலீஸ் விழாவில் நடிகர் அதர்வா பேசியிருக்கிறார்.

Atharvaa: இதயம் முரளி என்னும் திரைப்படத்தின் முதல் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு, சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் நடிகர் அதர்வா, ப்ரீத்தி முகுந்தன், ஆர்.ஜே.ஏஞ்சலினா, ரக்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக, இசையமைப்பாளர் எஸ். தமனும், யூடியூபர் டேவிட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அதர்வா, ‘’உங்க எல்லார்கிட்டேயும் ஒரு கேள்வி கேட்கணும். எத்தனை பேர் லவ் பண்றீங்களோ கை தூக்குங்க. கம்மியாக இருக்கே. இங்கே எத்தனை பேர் ஒன் சைடு லவ் பண்றீங்க. மெஜாரிட்டி அதுதான் அதிகமா இருக்கு போலயே.
உண்மையிலேயே சொல்லணும் என்றால் டபுள் சைடு லவ்வைவிட ஒன் சைடு லவ்ல இருக்கிற சந்தோஷம் ஆகட்டும்; துக்கம் ஆகட்டும்; ஏமாற்றம் ஆகட்டும், அதெல்லாம் வாழ்வில் மறக்கவே முடியாது.
அதுக்கெல்லாம் டெடிகேட் பண்றமாதிரி ஒரு படம். ’இதயம் முரளி’ என்பது என்னோட அப்பாவுக்காக வந்து டைட்டில் வைக்கல. இந்த படத்தில் எனக்குள்ள ஒரு இதயம் முரளி இருக்கான்.
உங்க எல்லோருக்குள்ளேயும் ஒரு இதயம் முரளி இருப்பாங்க. லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் மாதிரி நம் ஊரில், ’ஒன் சைடு லவ்’ என்றால், அது இதயம் முரளிதானே. அதனால் தான், இதயம் முரளி படம் வந்தது. இந்த படம் பண்ணது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
இது பேக்கரி கிடையாது, சினிமா பொறுமையாக பண்ணலாம்: நடிகர் அதர்வா
இவ்வளவு நாளாக எங்க போயிட்டீங்கன்னு கேட்குறாங்க. இது என்ன பேக்கரியா டக்கு டக்குன்னு பண்றதுக்கு. படம் பொறுமையா பண்ணுவோமே. இது எத்தனை பேருக்கு கிடைக்கும்னு தெரியாது. அப்பாவுடைய ஒரு ஐகானிக்கான ஒரு கேரக்டரில் டைட்டிலில் பண்றது ஸ்பெஷல் தானே.
இன்னைக்கு வந்துட்டு ஒன் சைடு லவ்வோட மீனிங்கே மாறி இருக்கு, அப்படின்னு சொல்றாங்க. அதை நான் நம்பல. எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கும். இந்த இதயம் முரளியை வந்துட்டு நான் ஒரு தனிப்பட்ட மனிதராக சொல்ல மாட்டேன்.
இதயம் முரளி என்பது ஒரு உணர்வு. அடுத்து புரொடியூசர் ஆகாஷ், எனக்கு முதலில் ஒரு டைரக்டராக தான் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஸ்கிரிப்ட்டுக்காக தான் சந்திச்சோம். ஒரு சில காரணத்துக்காக அப்போது இந்தப் படம் டேக் ஆஃப் ஆகல.
இப்போது இந்தப் படத்தை ஆகாஷ் இயக்கவும் செய்தார், புரொடியூசும் பண்றார் அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப ரொம்ப சந்தோஷம் சார். ஓகே.லவ்வுக்கு என்னங்க டைம் கேம் எல்லாம்.
கல்லூரி நண்பர்கள் தான் வாழ்நாள் முழுக்க வருவர்: நடிகர் அதர்வா
நான் உங்க எல்லாருக்குமே ஒன்னே ஒன்னு தான் சொல்லிக்கிறேன். இப்போது நீங்க இருக்கிற தருணம் வந்து சிறந்த தருணம். இன்றைக்கு உங்கள் அருகில் உட்கார்ந்து இருக்க நண்பர் தான், வாழ்நாள் முழுவதும் உங்க நண்பராக இருக்கப்போறாங்க.
இன்றைக்கு உங்கள் லவ் ஒன் சைடாக இருந்தால், அது டபுள் சைடு லவ்வாகவும் மாறலாம். திருமணத்திலும் முடியலாம். இந்த கல்லூரி வாழ்க்கை சிறந்த தருணம். இந்த காலேஜ், என் காலேஜுக்கு வந்த மாதிரி ஒரு ஃபீலைத் தருது.
ஏன் லவ் படம் பண்ண மாட்டேன்றீங்க அப்படின்னு சொல்லி பல இடங்களில் கேட்பாங்க. என்னோட ஃபேன்ஸ்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் ஒரு நல்ல லவ் படம் பண்ணனுங்கிற ஒரு ஆர்வம் எனக்கு இருந்தது. இந்த இதயம் முரளி படத்தை எல்லோருக்காகவும் டெடிகேட் பண்றேன். முக்கியமாக நமக்குள்ள இருக்கிற இதயம் முரளியை, ஒன் சைடு லவ்வர்ஸ்க்காக டெடிகேட் பண்றேன். மீண்டும் உங்களை வந்து பார்த்தது ரொம்ப சந்தோஷம் வாழ்த்துகள். நன்றி’’ என முடித்தார், நடிகர் அதர்வா.
மேலும் படிக்க: நடிகர் அதர்வாவின் சமீபத்திய பேட்டி
மேலும் படிக்க: சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அதர்வா முரளி
மேலும் படிக்க: இசையமைப்பாளர் தமனின் பேட்டி

டாபிக்ஸ்