மூளையில் ஏற்பட்ட வீக்கம்.. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு டிஸ்சார்ஜ் - என்ன நடந்தது?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மூளையில் ஏற்பட்ட வீக்கம்.. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு டிஸ்சார்ஜ் - என்ன நடந்தது?

மூளையில் ஏற்பட்ட வீக்கம்.. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு டிஸ்சார்ஜ் - என்ன நடந்தது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 05, 2025 07:38 PM IST

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரது மூளையில் உள்ள ரத்த தமனியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூளையில் ஏற்பட்ட வீக்கம்.. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு - என்ன நடந்தது?
மூளையில் ஏற்பட்ட வீக்கம்.. மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு - என்ன நடந்தது?

அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நடிகர் பிரபுவுக்கு மூளையில் உள்ள ரத்த தமனியில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

மருத்துவர்கள் பிரபுவின் மூளையில் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்து, அவர் உடல் நிலை சீரான நிலையில் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, கடந்த 3ஆம் தேதியே நடிகர் பிரபு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூளையில் ஏற்பட்ட வீக்கம்

நடிகர் பிரபுவுக்கு நடு மூளை தமனியில் பிளவு பகுதியில் இருக்கும் தமனியில் மேல் பகுதியில் வீக்கம் இருப்பது பரிசோதனையின் போது கண்டறியப்பட்டது. இந்த வீக்கமானது பலூன் போன்று இருந்த நிலையில், இதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிரபுவின் மூளையில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சையின் போது அகற்றப்பட்டது. இதன் பிறகு மருத்துவ கண்காணிப்பி்ல இருந்து வந்த பிரபு தற்போது பூரண குணமாகியிருக்கும் நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

பிரபுவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் பெயர் மூளை அனீரிசிம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே பிரபுவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்த நிலையில், அவர் நலம் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சிறுநீரகத்தில் கல் அடைப்பு

68 வயதாகும் நடிகர் பிரபுவுக்கு கடந்த ஆண்டிலேயே சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபுவுக்கு மூளையில் ஏற்பட்ட வீக்கத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அகற்றியுள்ளனர்.

பிரபுவின் சினிமா பயணம்

1982இல் வெளியான சங்கிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் பிரபு. கல்லூரி படிப்பை முடித்தவுடன் தந்தை சிவாஜி கணேசன் போல் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவில் நடிக்க வந்தார் பிரபு. சினிமாவில் அறிமுகமான ஆண்டிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

கொழு கொழுவேன இருக்கும் பிரபுவின் தோற்றம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது. காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிப்பில் தூள் கிளப்பிய பிரபு தனக்கென ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கினார்.

தொடர்ந்து 20 ஆண்டுகள் வரை தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கி வந்த பிரபு, தற்போது ஹீரோக்களின் தந்தை, அண்ணன், சீனியர் போலீஸ் ஆபிசர் என கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த பிடி சார் படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த ஹீரோவாக பிரபு இருந்து வருகிறார். இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து சுமார் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.