Pritiviraj: தி கோட் லைஃப் படத்துக்காக உடல், மனரீதியில் எல்லைகளை உடைத்துள்ளேன் - ப்ருத்விராஜ்
மலையாள நடிகர் பிருத்திவிராஜ் சுகுமாரன் நடித்திருக்கும் ’தி கோட் லைஃப்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை, தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரும் ரீபல் ஸ்டார் என்ற ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான பிரபாஸ் வெளியிட்டுள்ளார்.

மொழிகளை கடந்த, மாநில எல்லையை கடந்த சினிமா நடிகர்கள் பலரும் பிற மொழி நடிகர்களின் படங்களுக்கு உதவுவதும், விளம்பரம் செய்வதுமான செயல்கள் அதிகரித்து வருவதுடன், சினிமாத்துறைக்கும் ஆரோக்கியமான சூழலை உருவாக்கியுள்ளது. அந்த வகையில், ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் தேசிய விருது பெற்ற பிளெஸி இயக்கத்தில், மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள தி கோட் லைஃப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.
பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்ற தெலுங்கு நடிகர் பிரபாஸ் வெளியிட்டுள்ளார். தி கோட் லைஃப் மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் உலகம் முழுவதும் ஏப்ரல்10, 2024 அன்று வெளியாகிறது.
உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம், சர்வைவல் அட்வென்சர் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.