Actor Ponvannan: 'பாட்டி கதை சொல்றது மாதிரி புத்தகம் என்ன கதை சொல்லி வளர்த்தியது'- நடிகர் பொன்வண்ணன் பேட்டி
Actor Ponvannan: சாதிய பின்புல குடும்பத்தை சேர்ந்த என்னை புத்தகங்கள் தான் பாட்டி கதை சொல்வது போல சொல்லி வளர்த்தின என நடிகர் பொன்வண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

Actor Ponvannan: நடிகர் பொன்வண்ணன், தன்னை நடிகராகவும், இயக்குநராகவும் ஓவியராகவும் எழுத்தாளராகவும் அடையாளப்படுத்தி வருகிறார். முக்கியமாக அவர் தன் காத்திரமான நடிப்பின் மூலம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னை மக்களுடன் மக்களாக பிணைத்து காட்டி வருகிறார்.
கெட்டி மேளம் தொடர்
இந்நிலையில், அவர், சின்னத்திரை, வெள்ளித்திரை மட்டுமல்லாது அவர் வெப் சீரிஸ்களிலும் தன் நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்து வருகிறார். ஹாட்ஸ்டாரில் வெளியான உப்பு புளி காரம் வெப் தொடரில் புள்ளைகளுக்காக தோள் கொடுத்து நிற்கும் அப்பாவாக நடித்து அனைவர் மனதிலும் இடம்பிடித்த பொன்வண்ணன் தற்போது ஜீ தமிழில் வெளியாகும் கெட்டி மேளம் எனும் மெகாத் தொடரில் இணைந்து பயணித்து வருகிறார். இதுகுறித்து டெலி விகடன் யூடியூப் பக்கத்திற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
சாதிய அடிப்படை கொண்ட குடும்பம்
அந்தப் பேட்டியில், நான் சாதிய அடிப்படை கொண்ட விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். என்னை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றது எல்லாமே புத்தகங்கள் தான். சின்ன வயசுல இருந்தே எனக்கு புத்தகங்கள் மேல பிரியம். படிச்சுட்டே இருப்பேன். அவை தான் எனக்கு பாட்டி கதை சொல்ற மாதிரி சொல்லி என்னை வளர்த்தது. நான் படிச்ச கதைகள் என் வாழ்க்கையில் நான் பின்னால் சந்திக்கப் போகும் பிரச்சனைக்கு எல்லாம் விடைய முன்னாடியே கொடுத்திருக்கும். அந்தக் கதையில வந்தவனுக்கு இதே தான நடந்ததுன்னு நான் யோசிச்சு அதுக்கு தகுந்த மாதிரி என்ன தயார் பண்ணிடுவேன்.
ஆதரவா நடக்க நினைத்தேன்
எங்க அப்பா, அம்மா விவசாய வேலை செஞ்ச சமயத்துல கூட என்னை அவங்க தொந்தரவு பண்ணல. அவங்களுக்காக நான் அந்த கஷ்டமான சமயத்துல கூட வேலை செஞ்சது கிடையாது. அதுக்காக அவங்க என்கிட்ட கோவிச்சுக்கவும் இல்ல. அவ்ளோ கஷ்டமான சூழ்நிலையிலும் கூட அவங்க எனக்கு ஆதரவா இருந்த மாதிரி தான் நான் என் மனைவிக்கும் மகள்களுக்கும் ஆதரவா நடந்துக்க நினைச்சேன்.
வழிகாட்டியா தான் இருப்பேன்
என் அம்மாவையும், என் கூட பிறந்தவங்களையும் நான் மதிக்குற மாதிரி, அவங்களோட ஆசைய நிறைவேத்துற மாதிரி தான் என் துணைவிக்கும், மகளுக்கும் செய்வேன்.
அந்த சின்ன கிராமத்துல எந்த பின்புலமும் இல்லாத நான் சினிமாக்கு வர என் பெத்தவங்க சம்மதம் சொன்னாங்க. அப்போ, நான் எப்படி என் பிள்ளைங்கள தடுக்க முடியும். அவங்க எந்த துறைக்கு போகணும்ன்னு ஆசைப்படுறாங்களோ, அதை நான் ஒரு வழிகாட்டி போல நின்னு செய்வேன். அதையும் மீறி அவங்க தனக்கு ஒரு வழி இருக்குன்னு சொன்னா நான் கைய கட்டிட்டு வேடிக்கை பாப்பேன்.
புத்தகம் தான் ஆசான்
எல்லாருக்கும் மூளை இருக்கு. அவங்க அவங்க தங்களுக்கு தேவையானத யோசிப்பாங்க. அதுக்காக தான் அவங்க படிக்குறாங்க. அதுனால, நாம யாரையும் கண்ட்ரோல் எல்லாம் பண்ண முடியாது. இத எல்லாம் என் மண்டைக்குள்ள ஏத்துனது புத்தகம் தான். அதுதான் என் ஆசான் என கூறி படிப்பின் மகத்துவத்தை கூறினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்