HBD Karunas: காமெடி நடிகர் டூ அரசியல்வாதி - பன்முக கலைஞன் கருணாஸ் பிறந்தநாள்
கானா பாடகராக வாழ்க்கையை தொடங்கி, சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, ஹீரோவாக சில படங்களில் நடித்து, தற்போது அரசியல்வாதியாகவும் மாறியிருப்பதோடு நடிப்பு, அரசியல் என இரண்டையும் இன்று வரையிலும் தொடந்து வருகிறார் நடிகர் கருணாஸ்.
சூர்யா நடித்த நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்தில் சோலோ காமெடி செய்து ரசிகர்களின் வயிறை புண்ணாக்கியவர் நடிகர். இயக்குநர் பாலாவின் அறிமுகமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த கருணாஸ் தொடர்ந்நது காமெடியனாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தார்.
சினிமாவில் நடிப்பதற்கு முன்னர் பாப் பாடகராகவும், நாட்டுப்புற இசைக்கலைஞராகவும் இருந்து வந்தார் கருணாஸ். 12 வயதில் இருந்தே கானா பாடல்களை பாடி வந்த கருணாஸ், 90ஸ்களில் பிரபல டிவி நிகழ்ச்சியாக யுகி சேது தொகுத்து வழங்கிய நய்யாண்டி தர்பாரில் இசைக்கலைஞராக இருந்தார். இவரது கானா பாடல்களால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் பாலா நந்தா படத்தில் நடிக்க வைத்தார்.
கருணாஸ் காமெடியின் ப்ளஸ் ஆன விஷயமாக அவரது டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் என அனைத்தும் இருந்தன. நந்தா படத்துக்கு பின்னர் அடுத்தடுத்து வாயப்புகளை பெற்ற இவர் ரஜினியுடன் பாபா, அஜித்துடன் வில்லனன், விஜய்யுடன் புதிய கீதை, கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ் என டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக கலக்கினார்.
கருணாஸ் காமெடி தவிர குணச்சித்திரம், சீரியஸான வேடங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் முத்திரை பதித்திருக்கிறார். ஹீரோவாகவும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
காமெடியனோ, ஹீரோவோ, வில்லனனோ அல்லது எந்த கதாபாத்திரமோ அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மற்றவர்களை விட தனிக்கவனம் பெறுவது கருணாஸின் சிறப்பாகவே இருந்தது.
சினிமாவில் தனது நடிப்பாலும், தனது காமெடிக்கு என தனி ரசிகர் கூட்டத்தையும் சம்பாதித்த கருணாஸ், அரசியலிலும் ஈடுபட்டார். முக்குளத்தோர் புலிப்படை என்ற அரசியல் கட்சியின் தலைவராக இருந்து வரும் கருணாஸ், 2016 சட்டப்பேரவை தேர்தலில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
கருணாஸின் நிஜப்பெயர் கருணாநிதி சேது என்பதாகும். சினிமாவுக்காக அதை சுருக்கி, அதே நேரத்தில் ஸ்டைலிஷான கருணாஸ் என்ற பெயருக்கு மாறினார். தற்போது நடிப்பு, அரசியல் என இரண்டையும் சமநிலையுடந் செய்து வருகிறார். கானா பாடல் பாடகராக வாழ்க்கையை தொடங்கி நடிகர், அரசியல்வாதி என் பன்முக கொண்டவராக மாறியிருக்கும் கருணாஸுக்கு இன்று பிறந்தநாள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்