Actor Pandian: குடியால கெட்டாரு.. பணத்தோட அருமை தெரியல.. புலம்பும் நடிகரின் மகன்..
Actor Pandian: 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய ஹீரோவாக வலம் வந்த பாண்டியன் குடியால் வாழ்க்கையை இழந்ததாக அவரது மகன் வேதனையாக பேசியுள்ளார்.

Actor Pandian: தமிழ் சினிமாவின் 90களின் காலகட்டத்தில் முக்கிய ஹீரோவாக வலம் வந்தவர் பாண்டியன். கிராமத்து நாயகனாக மண் வாசனை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அடுத்தடுத்து மனைவி சொல்லே மந்திரம்,வாழ்க்கை, புதுமைப்பெண், மண்சோறு, தலையணை மந்திரம், மருதாணி, ஆண்பாவம், முதல் வசந்தம், கிழக்குச் சீமையிலே என பெரிய பட்டியலே சென்றது.
பாண்டியன் மறைவு
கதாநாயகன் என்றாலும் வில்லன் என்றாலும் என்னை மிஞ்ச யாரும் இல்லை என நடித்து அசத்தி வந்த இவர், 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.
அவர் உயிரிழக்கும் தருவாயில், உதவிக்காக எதிர்பார்த்ததாகவும், நண்பர்களாலே ஏமாற்றப்பட்டதாகவும் பல செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில், இதுகுறித்து அவரது மகனிடம் பிஹைண்ட்வுட்ஸ் பேட்டி எடுத்தது.
குடிக்கு அடிமை
அந்தப் பேட்டியில், "எங்க அப்பா நல்லா குடிப்பாரு. குடிக்கு அடிமையே ஆகிட்டாரு. அவரோட நண்பர்களும் அதே மாதிரி இருந்ததால எங்களால அவர கன்ட்ரோல் பண்ண முடியல. அப்பாட்ட இருந்த ஒரே மைனஸ் அவரோட குடி பழக்கம் தான். அது ஒன்னு மட்டும் இல்லைன்னா அவர கையலே பிடிக்க முடியாது. அவரு ரொம்ப வெகுளியான ஆளு.
அப்பாவ கீழ இறக்கி பல பேர் மேல வந்துட்டாங்க
நம்மளுக்கு ஒரு தேவை இருக்குன்னா தான மத்தவங்கள தேடி போவாங்க. அப்படி அப்பாவ வச்சு நெறைய பேர் வாழ்ந்துட்டாங்க. அதே சமயம் அப்பாக்கு தேவையான சமயத்துல அவங்க எல்லாம் கை கொடுக்காமலும் போயிட்டாங்க. அப்பாக்கூட நல்லா பழகுற மாதிரி பழகி அப்பாவ கீழ இறக்கி அவங்க எல்லாம் பெரிய ஆளாகிட்டாங்க. இந்த மாதிரி ஆளுங்களால எங்க அப்பா மட்டும் இல்ல நெறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க.
பணத்தோட அருமை தெரியல
எங்க அப்பாக்கு பணத்தோட அருமை தெரியல, யார எந்த இடத்துல வைக்கணும்ன்னும் தெரியல. இப்போ அப்பா காலத்துல இருந்த நடிகர்களுக்கு எல்லாம் பணத்தோட அருமை தெரிஞ்சது. சினிமா எப்படின்னு தெரிஞ்சது. அதுனால அவங்களால நிலைச்சு நிக்க முடிஞ்சது. ஆனா, அப்பாவுக்கு எடுத்து சொல்ல ஆள் இல்ல.
கம்பெனி கம்பெனியா அலைஞ்சேன்
அப்பா இறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள் பெரியப்பா, கொஞ்ச நாள் பாட்டி எங்கள பாத்துகிட்டாங்க. அதுக்கு அப்புறம் எங்கள நாங்களே பாத்துக்க வேண்டிய கட்டாயம். நான் 25 கம்பெனி ஏறி இறங்கிருப்பேன். யாரும் எனக்கு உதவல. 2 பட வாய்ப்பும் வந்தது. ஆனா சரியான வழிகாட்டுதல் இல்லாததுனால அதுவும் கைய மீறி போயிடுச்சு. எனக்கு கடவுள் கொடுதேத வரம்ன்னா அது நானும் என் அப்பாவும் ஒரே மாதிரி இருக்குறது தான்." என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்