‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி

‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி

Marimuthu M HT Tamil Published Feb 23, 2025 01:03 AM IST
Marimuthu M HT Tamil
Published Feb 23, 2025 01:03 AM IST

நடிகர் பாண்டியன் மகனின் பேட்டி: மண்வாசனை படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகர் பாண்டியன். அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பின், அவரது ஒரே மகன் ரகு பாண்டியன் எமோஷனலாகப் பேட்டியளித்துள்ளார்.

‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி
‘அப்பா கூட நன்கு பழகுற மாதிரி பழகி கீழே தள்ளிட்டு பெரிய ஆள் ஆகியிருக்காங்க’: நடிகர் பாண்டியனின் மகன் ரகு பேட்டி

இந்நிலையில் ரகு பாண்டியன் பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி, 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி 16ஆம் தேதி வெளியானது. அவற்றின் தொகுப்பினைக் காணலாம்.

’மண்சார்ந்த படங்கள் என்றாலே பாண்டியன் சார் நல்ல ரோலில் நடித்திருப்பாங்க. அவருடைய கேரியர் எங்கு தொடங்குச்சு?

அப்பா பாண்டியன் மதுரை ஜெயராஜ் நாடார் ஸ்கூலில் 10ஆவது வரை படிச்சார். அந்த ஸ்கூலில் இவர் வந்து பெரிய சண்டியர் மாதிரி இருந்திருக்கார். ஒரு புரூஸ்லி மாதிரி இருந்தார். துறுதுறுன்னு இருந்திருக்கார். அதற்கப்புறம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வளையல் வியாபாரம் பார்த்திட்டு இருந்தார். வார கலெக்‌ஷனுக்கு அப்பா போகும்போது, பாரதிராஜா சார் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரினசம் செய்ய வந்திருக்கார். அவரை நம்ம கடைக்குக் கூட்டிட்டு வான்னு, எங்கப்பாவுடைய சித்தப்பா தனபால் சொல்லியிருக்கார். 

அப்போது பாரதிராஜா சார் பக்கத்தில் போய், அவர் கையைப் பிடிச்சிருக்கார், அப்பா பாண்டியன். அப்பா பாரதிராஜா சார் பார்த்திட்டு என்ன கை வெள்ளையாக இருக்கு, புலித்தோல் மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு, நீ யாருப்பான்னு கேட்கிறார், பாரதிராஜா சார். நான் மீனாட்சி அம்மன் கோயிலில் வளையல் கடை வைச்சிருக்கேன்னு சொல்றார், அப்பா.

அப்போது கடைக்குப்போய் இரண்டுபேரும் பேசிட்டு இருந்திருக்காங்க. அடுத்து, பாரதிராஜா சார் என்கூட வர்றீங்களாப்பா ஒரு டெஸ்ட் எடுக்கணும்னு கூப்பிடுறார். அப்போது சித்ரா லட்சுமணன் சார், தெரியாத ஆளை எல்லாம் அழைச்சிட்டு வர்றீங்க அப்படின்னு சொல்லி, அப்பா பாண்டியனை காரில் ஏத்தவிடல.

அப்போது பாரதி ராஜா சார் அவன்கிட்ட என்னமோ இருக்கு, என்னமோ, அவனை பார்த்ததும் உலகத்தையே மறந்திட்டேன்னு சொல்லி, அடுத்த நாள் தேனிக்கு வரச்சொல்லியிருக்கார்.

அப்போது நிறைய நடிகர்களை தேர்வு பண்ணிட்டு இருக்கார், பாரதி ராஜா சார். அப்போது நேரில் போய் பார்த்ததும் கொஞ்ச நேரம் நில்லுப்பான்னு சொல்லியிருக்கார், பாரதிராஜா சார். அப்போது கமலா தியேட்டர் ஓனர் அந்தப் படத்தில் நடிக்க வேண்டியது. அப்போது என் அப்பாவைப் பார்த்திட்டு எவன்னே தெரியல, இவனெல்லாம் நடிக்க வந்திருக்கான். அப்படி சொன்னதும் அப்பாவுக்கு ஒரு மாதிரியாகிடுச்சு. சரின்னு அங்கிட்டுபோய் நின்னுட்டார்.

கொஞ்சநேரத்தில் பாரதிராஜா சாரே திரும்ப வந்து, தரையில் இருக்கிற மண்ணை எங்கப்பா கையில் கொடுத்து, இதில் எத்தனை துகள் இருக்கு என்று சொல்லுன்னு சொல்லி டெஸ்ட் வைச்சிருக்கார். உடனே அப்பாவும் மூவாயிரத்து ஐநூறு இருக்கும்ன்னு சொல்லியிருக்கார். அதைக்கேட்ட பாரதிராஜா, என் படத்தில் நீ தான் ஹீரோன்னு சொல்லிட்டார். அதைக்கேட்டதும் ஆடிப்போயிட்டார், அப்பா.

சரின்னு மண்வாசனை படத்தில் நடிக்கிறார், அப்பா பாண்டியன். ரேவதி மேடத்துடைய அப்பா ராணுவத்தில் வேலை பார்த்தவராம். மண்வாசனை படம் ரிலீஸாகும்போது மக்கள் நம்மளை ஏத்துப்பாங்களா அப்படின்னு அப்பாவுக்கு ஒரு பயம் வந்திருக்கு.

மண்வாசனை படம் ரிலீஸான அன்று, தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்கும்போது, படம் முடிஞ்சதும் ஆடியன்ஸ் எல்லோரும் அப்பாவை ஹீரோன்னு சொல்லி தோளில் தூக்கிட்டாங்களாம். இதை அப்பா என்னிடம் சொன்னார்.

அப்பா பாண்டியன் கடைசிக்காலத்தில் யாருடைய உதவியும் இன்றி கஷ்டப்பட்டார்னு சொன்னாங்க. என்ன நடந்தது?

அப்பா பயங்கரமாக குடிப்பார். அப்பா தேவை இல்லை என்றதும் அவர்கூட இருந்தவங்க எல்லாரும் விலகிபோயிட்டாங்க. அவர்கிட்ட இருந்த ஒரே ஒரு மைனஸ் குடிப்பழக்கம் தான்.

என்ன மாதிரியான விஷயங்களில் அப்பா பாண்டியன் ஏமாற்றப்பட்டார்னு நினைக்கிறீங்க?

அப்பா பாண்டியனை வைச்சு நிறையபேர் சினிமாவில் வந்தாங்க. ஆனால், கடைசி காலத்தில் கைகொடுக்காமல் போயிட்டாங்க. நல்லா பழகுற மாதிரி, பழகி அவரை கீழேதள்ளிவிட்டு பெரிய ஆளாக வந்திருக்காங்க. அப்படி நிறைய பேர் இருக்காங்க.

கஷ்டங்கள் வந்தபோது எப்படி அதைச் சமாளிச்சீங்க?

எங்கப்பாவுக்கு பணத்துடைய அருமை தெரியல. யாரை எங்க வைக்கணும்னு தெரியல. எல்லோரையும் நம்பிட்டார். பாரதிராஜா சார், டி.ராஜேந்தர் சார், பிரபு பெரியப்பா, கார்த்திக் சார் இவங்க எல்லோரும் சினிமாவில் வந்தாங்க. ஆனால், வாய்ப்புகள் இல்லாதபோது தேடி போனாங்க. என் அப்பா வாய்ப்புகள் தேடிபோகல. அவங்களுக்குத் தெரியும் இதுதான் ஃபீல்டு என்று.                                       பணம் இல்லை என்றால் நம்மை மதிக்கமாட்டார்கள் என்று அவங்களுக்குத் தெரியும். எங்கப்பாவுக்கு எடுத்து சொல்றதுக்கு ஆள் இல்லை. அப்பா இறந்ததும் எங்க பெரியப்பாவும் கொஞ்ச காலத்தில் இறந்திட்டாங்க. எங்க பாட்டியும் அடுத்த கொஞ்ச நாட்களில் இறந்திட்டாங்க. 2008ல் இருந்து நான் காலேஜ் முடிக்கிற வரை, அம்மா தான் கஷ்டப்பட்டு பார்த்துக்கிட்டாங்க’’ என்றார், நடிகர் பாண்டியனின் மகன் ரகு.

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல்