சகலகலா வல்லவர்.. தமிழ் சினிமாவின் நாயகன்.. பன்முக கலைஞர் நிழல்கள் ரவி பிறந்தநாள்..!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சகலகலா வல்லவர்.. தமிழ் சினிமாவின் நாயகன்.. பன்முக கலைஞர் நிழல்கள் ரவி பிறந்தநாள்..!

சகலகலா வல்லவர்.. தமிழ் சினிமாவின் நாயகன்.. பன்முக கலைஞர் நிழல்கள் ரவி பிறந்தநாள்..!

Suriyakumar Jayabalan HT Tamil
Apr 16, 2024 05:50 AM IST

Actor Nizhalgal Ravi: நிழல்கள் ரவி 80களில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பல முன்னணி நடிகைகளான ராதிகா , ராதா , கவுதமி , குஷ்பு , ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார்.

நிழல்கள் ரவி பிறந்த நாள்
நிழல்கள் ரவி பிறந்த நாள்

பின்னர், அவர்களைப் போலவே மிமிக்ரியும் செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என சென்னை வந்தவர், 1980-ல் பாரதிராஜாவின் நிழல்கள் படம் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார்.

1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி இந்தப் படத்தின் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் அவருக்கு நிழல்கள் ரவி என்று அடையாளத்தை பெற்று கொடுத்தது. இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

வேதம் புதிது, நாயகன், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணாமலை, ஆசை என்று ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

படங்களில் நடிப்பதோடு அல்லாமல், சின்னத்திரையிலும் வலம் வந்துள்ளார். சின்னதம்பி பெரிய தம்பி (1987), நாயகன் (1987), வேதம் புதிது (1987) போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 80களில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் பல முன்னணி நடிகைகளான ராதிகா , ராதா , கவுதமி , குஷ்பு , ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் ஜோடியாக நடித்தார்.

ரயில் சினேகம், அலைகள், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர்,நகைச்சுவை என எந்த ரோலாக இருந்தாலும் சரி சிறப்பாக நடித்து முடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார். 

இவர் நடிகர் மட்டும் அல்ல டப்பிங் கலைஞரும் ஆவார். அவரது குறிப்பிடத்தக்க படங்களில் இந்தியன் (1996), குஷி (2000), பட்ஜெட் பத்மநாபன் (2000), சிட்டிசன் (2001), அட்டஹாசம் (2004), தாமிரபரணி (2007), தாம் தூம் (2008),சிங்கம் (2010), காவலன் (2011), ஆடு புலி (2011), ஒஸ்தே (2011), வணக்கம் சென்னை (2013) போன்ற பல நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

கே.ஜி.எஃப் படம்னு சொன்னவுடனே நமக்கு நினைவுக்கு வருவது மாஸான டயலாக்குகளும் கம்பீரமான நிழல்கள் ரவியோட குரலும்தான். இரண்டாவது பாகத்துல அவரோட குரல் இடம்பெறாதது ஃபேன்ஸ் பலருக்கும் வருத்தத்தைக் கொடுத்துச்சுனே சொல்லலாம்.

வேலை, என்னவளே, ஜூனியர் சீனியர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் ஜெ.சுரேஷ். இவரின் திரைபயணத்தில் நிழல்கள் ரவி முக்கிய பங்கு வகித்துள்ளார் என்றே சொல்லலாம். அப்படி என்ன செய்தார் தெரியுமா? திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடி வந்த ஜெ.சுரேஷ் பல நாட்களாக சென்னையில் அலைந்து திரிந்த நிலையில் கையில் காசு இல்லை. ஒரு நாள் இரவு நேரத்தில் பனகல் பார்கில் உள்ள துணிகடை வாசலில் நடிகர் நிழல்கள் ரவி சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தாராம்.

அவர் அருகே சென்ற சுரேஷ் சார் வணக்கம். நான் எனக்கு சினிமாவுல நடிக்கனும்ன்னு ஆசை யாரை போய் பார்க்குறதுன்னே தெரியல. எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என கேட்டிருக்கிறார். இதனை கேட்டதும் நிழல்கள் ரவி சாப்டியா? என கேட்டிருக்கிறார். உடனே சுரேஷ், சாப்பிட்டேன் சார் என்று பொய்யாக கூற, நிழல்கள் ரவி, தனது பர்சில் இருந்து நூறு ரூபாயை எடுத்துக்கொடுத்து சாப்பிட சொல்லி கொடித்தாராம். அதன் பின் ஒரு தனது விளாசத்தை கொடுத்து நாளைக்கு வந்து பார்க்க கூறினாராம்.

அடுத்த நாள் வீட்டிற்கு சென்ற சுரேஷை உட்காரவைத்து சாப்பாடு போட்டாராம். சுரேஷ் சாப்பிட்டதும் அவர் கையில் ஒரு சினிமா டைரியை கொடுத்து இதில் அனைத்து இயக்குனர்களின் விளாசமும் சினிமா கம்பெனிகளின் விளாசமும் இருக்கிறது. இதனை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடு. நீ நடிகனாகி விட்டால் என்னை வந்து பாரு என கூறினாராம். இதுபோல பலருக்கும் பலவிதமாக உதவி செய்துள்ளார் நிழல்கள் ரவி.

இன்று நிழல்கள் ரவி பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது பிறந்தநாளை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் வாழ்த்தலாமே.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.