Nivin Pauly: மன்மதனாக வரும் நிவின் பாலி.. இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோவா? என்ன சொல்கிறார்?
Nivin Pauly: நிவின் பாலி தனது அடுத்த மலையாளப் படமான 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் போஸ்டரை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார். இந்தப் படத்தில் அவர் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.

Nivin Pauly: மலையாள சினிமா நட்சத்திரம் நிவின் பாலி இன்று ஞாயிற்றுக்கிழமை "இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படத்தில்" தான் நடிப்பதாகவும் அந்தப் படத்தின் பெயர் 'மல்டிவெர்ஸ் மன்மதன்' எனப் பெயரிட்டிருப்பதாகவும் அறிவித்து படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தை 2023 ஆம் ஆண்டு வெளியான 'என்கிலும் சந்திரிகே' மற்றும் 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஆவரேஜ் அம்பிலி' என்ற மினி தொடர் ஆகியவற்றை இயக்கிய அதித்யன் சந்திரசேகர் இயக்குகிறார்.
மன்மதனான நிவின் பாலி
அனந்து மற்றும் நித்திராஜ் இணைந்து 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தின் கதையை எழுதியுள்ளனர். நிவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இவ்வாறு அறிவித்தார். “இது எனக்கு மிகவும் பிடித்தமானது! இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படமான 'மல்டிவெர்ஸ் மன்மதன்' படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் காட்டுத்தனமான, வேடிக்கையான பயணம் திரையில் உயிர்ப்பெறுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்! தாதா மற்றும் ரெசு கதாப்பாத்திரம் உங்கள் நீங்கள் கற்பனை செய்தது போலவே வர இருக்கிறது.” எனக் கூறியுள்ளார்.
நிவின் பாலியின் அடுத்தடுத்த படங்கள்
நிவின் கடைசியாக டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கிய மலையாளி ஃப்ரம் இந்தியா என்ற நகைச்சுவை-நாடகப் படத்தில் நடித்தார். அவர் விரைவில் மலையாளத்தில் 'டியர் ஸ்டுடென்ட்ஸ்' படத்திலும், நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். தமிழில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் அஞ்சலி மற்றும் சூரி ஆகியோருடன் இணைந்து நடிக்கிறார். அவர் ஹாட்ஸ்டார் தொடரான 'பார்மா' மூலம் ஓடிடி தொடரிலும் அறிமுகமாகிறார்.
நிவின் பாலி பாலியல் குற்றச்சாட்டு
சமீபத்தில் ஒரு பெண் துபாயில் நிவின் பாலி உள்ளிட்ட 5 பேர் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி நிவின் பாலி மீது புகாரும் அளித்தார். பின், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்பட்ட நிலையில், நிவின் பாலி குற்றமற்றவர் என கடந்த ஆண்டு நவம்பரில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இந்த செய்தி வெளியான பிறகு, அவர் இன்ஸ்டாகிராமில், “என்னை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பு, பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவுக்காக நன்றி.” என்று குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை அறிக்கை
அவரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்த விசாரணை குழுவின் அறிக்கையில், “நடிகர் நிவின் பாலியின் குடியேற்ற விவரங்கள், கிரெடிட் கார்டு பரிவர்த்தனை பதிவுகள் மற்றும் பிற பயண விவரங்களை நாங்கள் ஆராய்ந்தோம். இந்தக் கண்டுபிடிப்புகள் குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போகவில்லை. எனவே குற்றவாளிகள் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க முடிவு செய்தோம்.” எனக் கூறி இருந்தனர்.
மக்களுக்கு நன்றி
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த சம்பவம் பற்றி பேசிய நிவின் பாலி “எனது கடினமான காலகட்டத்தில், என்னை ஆதரித்தது மக்கள் தான். உங்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த மேடை அதற்காகத்தான். இந்த ஆண்டு நல்ல படங்களுடன் திரும்புவேன். மேலும் உங்கள் ஊக்கமும் அன்பும் தொடரும் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்