நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் உரிமையாளர்களுக்கும் சுத்து போட்ட போலீசார்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் உரிமையாளர்களுக்கும் சுத்து போட்ட போலீசார்..

நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் உரிமையாளர்களுக்கும் சுத்து போட்ட போலீசார்..

Malavica Natarajan HT Tamil
Published Apr 23, 2025 02:35 PM IST

நடிகர் நெப்போலியன் மகன் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட யூடியூப் வீடியோக்களை போலீசார் நீக்கி வரும் நிலையில், அந்த யூடியூப் உரிமையாளர்கள் குறித்த தரவுகளையும் திரட்டி வருகின்றனர்.

நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் உரிமையாளர்களுக்கும் சுத்து போட்ட போலீசார்..
நெப்போலியன் மகன் குறித்த அவதூறு வீடியோக்கள் நீக்கம்.. யூடியூப் உரிமையாளர்களுக்கும் சுத்து போட்ட போலீசார்..

அவதூறு வீடியோக்கள்

இந்த நிலையில் சமீபகாலமாக தனுஷின் உடல்நலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. இதனைக் கவனித்த நெப்போலியன், தனுஷ் குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தன் உறவினர் மூலம் நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தனுஷ் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியான வீடியோக்களை சைபர் கிரைம் போலீசார் அகற்றி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோக்களை பதிவிட்ட யூடியூப் சேனல்களின் உரிமையாளர்களின் தரவுகளையும் சேகரித்து வருகின்றனர்.

நெல்லையில் புகார்

முன்னதாக, நெல்லை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில், ‘ நெப்போலியன் மகன் தனுஷ் பற்றியான அவதூறுகளை நீக்க வேண்டும். தனுஷ் உடல்நிலை குறித்து வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மனைவியோடு மகிழ்வான வாழ்க்கை

இந்த புகார் குறித்து மருத்துவர் டேனியல் பாலாஜி கூறும் போது, ‘நெப்போலியன் மகன் தனுஷ் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் யூடியூப் தளங்களிலும், இதர சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்பட்டு கொண்டிருக்கின்றன. அதில் எதிலும் உண்மை இல்லை. அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார். அவர் தன்னுடைய மனைவியோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சோர்வை தருகிறது

இப்படிப்பட்ட பொய்யான தகவல்களை பரப்புவது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளையும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும் சோர்வை தருகிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இவ்வாறு செயல்படுவர்களை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் தற்போது புகார் கொடுத்திருக்கிறோம்.

அந்த புகாரியில் மாற்றுத்திறனாளிகளை பற்றி தவறான கருத்துக்களை பரப்பக்கூடாது, நெப்போலியன் தனிப்பட்ட குடும்ப விஷயங்கள் குறித்து பேசக்கூடாது. ஏற்கனவே பதிவிட்ட வதந்திகளை நீக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம்’ என்று பேசினார்.

பதிலடி தந்த நெப்போலியன் குடும்பம்

முன்னதாக, இந்தத் திருமணத்தை ஒட்டி மணமகன் தனுஷூக்கு பலர் வாழ்த்து தெரிவித்த போதும், சிலர் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு விமர்சித்தனர். அத்துடன், திருமணமான பெண்ணின் நிலையை நினைத்து வருந்துவதாகவும், பணம் இருப்பதால் தான் நெப்போலியன் இதை எல்லாம் செய்கிறார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் கூறி வந்தனர். இவற்றிற்கு எல்லாம் நெப்போலியனும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு பேட்டிகளின் வாயிலாக பதிலடி கொடுத்தனர்.