பாகிஸ்தானுக்கு அந்த திருப்தியை கூட தரக் கடாது? அப்படி எதை சொல்கிறார் நடிகர் நானி?
நடிகர் நானியின் ஹிட் 3 படத்தின் வெற்றி விழாவில் பாகிஸ்தான் பற்றிய நானி பேசிய கருத்துகள் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானுக்கு அந்த திருப்தியை கூட தரக் கடாது? அப்படி எதை சொல்கிறார் நடிகர் நானி?
நேச்சுரல் ஸ்டார் நானியின் படம் ஹிட் 3. ஷைலேஷ் கொலனு இயக்கத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் கடந்த மே 1-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்தப் படம். இது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்ததை தொடர்ந்து படக்குழு வெற்றி விழாவை ஏற்பாடு செய்தனர்.
ஹிட் 3 வெற்றி விழா
நேச்சுரல் ஸ்டார் நானி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாகிஸ்தான் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது. "உங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த வெற்றிக் கொண்டாட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோது, நாட்டின் நிலைமை உணர்வுபூர்வமாக உள்ளதா, கொண்டாட்டங்களை நடத்த முடியுமா என்பது குறித்து விவாதம் நடந்தது. எதிரிகள் எங்களுக்கு ஒரு பிரச்சினையை உருவாக்க முயன்றனர். எங்கள் நாடும் இராணுவமும் அதற்கு மிகவும் கண்ணியமாக பதிலளித்துள்ளன.