Anirudh Ravichander: ‘அன்புள்ள அனிருத்’.. ஹாட்ரிக் வெற்றி வசப்படுமா? - மாஸ் நடிகருடன் கைகோர்த்த அனிருத்! - முழு விபரம்!
Anirudh Ravichander: இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ஷூட்டிங்கிற்கான முந்தைய வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரபல நடிகர் இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார் - மாஸ் நடிகருடன் கைகோர்த்த அனிருத்!

தெலுங்கு மக்களால், நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நானி. இவரது நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், சுதாகர் செருக்குரி, எஸ்.எல்.வி சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் “தி பாரடைஸ்” படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார்
கடைசியாக நானி நடிப்பில் வெளியான ‘தசரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் (SLV சினிமாஸ்) தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி ஆகியோருடன் மீண்டும் “தி பாரடைஸ்” எனும் திரைப்படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. ஷூட்டிங்கிற்கான முந்தைய வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர் நானி இப்படத்தில் தனது தோற்றத்திற்காக ஜிம்மில் பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்தப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், ஜெர்சி மற்றும் கேங்க்லீடர் வெற்றிகளுக்குப் பிறகு, நானி மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் இசையில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த சமூக வலைத்தள பதிவில் நானி கூறியுள்ளதாவது…: “நாங்கள் எங்கள் ஹாட்ரிக்கில் இணைந்துள்ளோம் :) இது அற்புதமான படமாக இருக்கும். #Paradise இப்போது N'Ani'Odela படம். அன்புள்ள அனிருத் உங்களை வரவேற்கிறோம்”
இதற்கு பதிலளித்துள்ள அனிருத், “இந்த திரைப்படம் ஸ்பெஷலான ஒன்று. என் அன்பான நானி மற்றும் ஸ்ரீகாந்த் ஒடேலா… லெட்ஸ் கோ கிரேஸி எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீகாந்த் ஒடேலா இப்படத்திற்காக ஒரு சக்திவாய்ந்த மாறுபட்ட அழுத்தமிகு திரைக்கதையை உருவாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும், இப்படம் நானியை முற்றிலும் புதிய, வெகுஜன அவதாரத்தில் காட்டும் என்றும் நடிகர் நானி மிகவும் தீவிரமான மற்றும் ஆற்றல்மிக்க பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறியிருக்கிறது.
அத்துடன், தயாரிப்பாளர் சுதாகர் செருக்குரி இப்படத்தின் திரைக்கதையில் ஈர்க்கப்பட்டு, மிகப்பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படத்தை உருவாக்குகிறார் என்றும் நடிகர் நானியின் திரை வாழ்க்கையில், மிக அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இப்படம் இருக்கும். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்